ஸ்டாலின் போட்ட ஒரே கையெழுத்து.. 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. இன்று ஒப்பந்தமானது..!
ஸ்டாலின் முன்னிலையில் 33 திட்டங்கள் இன்று கையெழுத்தாகின்றன
சென்னை: ரூ.4,250 கோடி முதலீட்டில் 9 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்... இத்ததகைய தொழில் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் 21,630 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அதேபோல, 17 ஆயிரம் கோடி மதிப்பிலான 33 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் இன்று கையெழுத்தாகின..
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார். அதிலும் அனைத்து துறைகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்...
2 மாத காலமாகவே, தொற்றினை கட்டுப்படுத்த முழு வீச்சில் இறங்கி அதிரடிகளை மேற்கொண்டார்... நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மேகதாது அணை விவகாரம் போன்ற விவகாரங்களுக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

தொழிற்சாலைகள்
மற்றொருபக்கம், மாநில வளர்ச்சி குழுவை மறு சீரமைப்பு செய்து அனைத்து துறைகளும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க வழிகாட்டி வருகிறார். இதனை தொடர்ந்து தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் ஏற்படுத்தி வருகிறார்...

ஒப்பந்தங்கள்
அதன் தொடர்ச்சியாகதான், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின... சென்னை கிண்டியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.

வேலைவாய்ப்பு
ரூ.4,250 கோடி முதலீட்டில் 9 தொழில் திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த தொழில் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் 21,630 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, 17 ஆயிரம் கோடி மதிப்பிலான 33 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் இன்று கையெழுத்தாகின.. குறிப்பாக ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 54 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

அடிக்கல்
Capital land, Adhani, JSW, ZF-WABCO உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெத்திட்டுள்ளன.. மேலும் இந்த நிகழ்ச்சியின் வழியே 14 புதிய தொழில் திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கர்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications