வட்டி எல்லாம் வேணாம்ங்க.. "உள்ளதை" கொடுத்தால் போதும்.. பாஜக அண்ணாமலைக்கு திமுக எம்பி பதிலடி!
சென்னை: திமுகவுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு திமுக எம்பி செந்தில் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தருமபுரி திமுக எம்பியாக உள்ளவர் செந்தில் குமார். இவர் தனது தொகுதி மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருவதுடன் ட்விட்டரில் யார் உதவி என கேட்டாலும் அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.
அது போல் எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனங்களுக்கு சூடாகவும் சுவையாகவும் பதிலடி கொடுப்பதிலும் வல்லவர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோருக்கு கடுமையான பதிலை திருப்பி கொடுத்தவர்.

பாஜக தலைவர்
அதே நேரம் அவர்களின் தவறுகளையும் தட்டி கேட்டு வருகிறார். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. பாஜகவின் செல்வாக்கை புட்டு புட்டு வைக்கும் தேர்தல் என்பதால் பாஜக தலைவர்கள் பம்பரம் போல் சுழன்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

ட்விட்டரில் பதிலடி
அந்த வகையி்ல மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் திமுகவினருக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். மத்தியில் ஆட்சியில் நாங்கள் உள்ளோம் என்பதை மறந்து விடாதீர்கள். எங்கள் வேட்பாளரை பணி செய்ய விடாமல் தடுத்தால் திமுகவினருக்கு வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம் என தெரிவித்துள்ளார். இதை தமிழக பாஜக தனது ட்விட்டரில் வெளியிட்டு #தமிழகமெங்கும்_தாமரை, #VoteBJP ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளன.

திமுக எம்பி செந்தில் குமார்
இந்த ட்வீட்டிற்குத்தான் திமுக எம்பி செந்தில் குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் வட்டி எல்லாம் வேண்டாம். முதலில் தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி தொகை மற்றும் மழை வெள்ள நிவாரணம் கொடுத்துட்டு அப்பறம் எங்கள மிரட்ட டிரை பண்ணுங்க என கலாய்த்துள்ளார்.
Recommended Video

வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற பாஜக போராடி வருகிறது. சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 4 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு கிடைத்தனர் என்ற விமர்சனத்தை உடைக்க நகர்ப்புற தேர்தலில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
