உதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Udhayanidhi Stalin : உதயநிதி நியமனம் எதிர்ப்பு ! முரசொலி விமர்சனம்- வீடியோ

    சென்னை: உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைந்துவிட்டதாகவும், அவர்கள் காந்தாரியைப் போல் அம்மி கல்லை எடுதது தங்களது அடிவயிற்றில் அடித்து கொள்ள தொடங்கி உள்ளதாகவும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.

    திமுகவின் இளைஞரணி செயலாளராக அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதற்கு விமர்சனங்கள் எழுந்ததன. இதற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக முரசொலி நாளேட்டில் சிலந்தி என்ற பெயரில் 'உதயநிதி நியமனமும்.. ஓநாய்களின் கண்ணீரும்' என்றகட்டுரை வந்துள்ளது. அவற்றின் சில முக்கிய கருத்துக்களை மட்டும் இப்போது பார்போம்.

    murasoli attacks who criticises udhayanidhi stalin appointed as dmk youth wing secretary

    உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைந்துவிட்டது. அவர்கள் காந்தாரியைப் போல் அம்மி கல்லை எடுதது தங்களது அடிவயிற்றில் அடித்து கொள்ள தொடங்கி உள்ளனர்.

    தி.மு.கழகத் தலைமை தன்னிச்சையாக என்றும் எந்த முடிவும் எடுப்பதில்லை. நிர்வாகத்தில் உள்ளவர்கள் விருப்பங்கள் முறிறிலும் அறிந்து தான் கழகத்தின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தலைமையிலோ மாவட்ட மற்றும் அடுத்த கட்ட நிர்வாகங்களில் இருப்பவர்களோ தெரிவிக்கும் கருத்து, இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனும் போது அதனை ஏற்றிட வேண்டியது தலைமையின் கடமைதானே!

    ஆதிக்க சக்திகளும் அதன் அடிவருடிகளும் தான் இப்போது உதயநிதி நியமனத்துக்காக 'ஓநாய்' கண்ணீர் விடத்தொடங்கியுள்ளனர். இளைஞர் அணி செயலாளர் ஏற்றதுமே உதயநிதி நியமனம் கண்டு எதிரிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதே அவர்களது மிரட்சியை காட்டுகிறது. எதிரிகளின் இந்த ஓலமே கழகத் தலைமை சரியான மிக சரியான தேர்வை செய்துள்ளதற்கு அத்தாட்சியாகிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+