திமுக எம்பி மனைவியிடம் சங்கிலி பறிக்க முயன்ற திருடர்கள்.. எதிர்த்து போராடியதால் தப்பிய தாலி!
ஆர்எஸ் பாரதி மனைவியிடம் நகை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சென்னை: திமுக எம்பி மனைவியிடமே, தாலி சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்பி ஆர்எஸ் பாரதி, திமுக வக்கீல்கள் அணி செயலாளரும்கூட. கட்சியில் ஒருசின்ன பிரச்சனை என்றாலும்கூட, உடனே ஒரு புகார் கொடுத்து கேஸ் போட்டுவிடுவார். அந்த அளவுக்கு மிக முக்கியமான நபர்.

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில், ஆர்.எஸ்.பாரதி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சம்பூர்ணம், வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் 2 பேர் வேகமாக சம்பூரணத்திடம் வந்து நின்றனர்.
திடீரென அவரது கழுத்திலிருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் சுதாரித்து கொண்ட சம்பூர்ணம், சங்கிலியை பறிக்க விடாமல் கெட்டியாக சங்கிலியை பிடித்து கொண்டு போராடி தடுத்து கூச்சலிட்டார்.
இந்த சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே கொள்ளையர்கள் சங்கிலியை விட்டுவிட்டு பைக்கை கிளப்பி பறந்துவிட்டனர். இது சம்பந்தமாக உடனடியாக ஆதம்பாக்கம் போலீசில் புகார் தரப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications