திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் நீடிக்கும் மர்மம்.. இந்த கேள்விகளுக்கு விடை என்ன?
சென்னை: திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளன. 100 பவுன் 200 பவுன், என்று நகைகள் திருட்டு போன வழக்கில் எல்லாம் காட்டாத அவசரத்தை 10 பவுன் நகைக்காக போலீஸ் காண்பித்தது ஏன்? யார் இந்த நிகிதா மற்றும் சிவகாமி? இவர்களின் பின்னணி என்ன?, மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார். 27 வயதே ஆன அஜித்குமார் அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 3 மாதங்களாக காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 27 ஆம் தேதி கோயிலுக்கு வந்த பெண் ஒருவரின் நகைகள் திருடு போன புகாரில், அஜித் குமாரை போலீசார் விசாரித்தனர்.

பல்வேறு சந்தேகங்கள் உள்ளன
விசாரணையின் போது போலீசார் அஜித்குமாரை, தடியால் சரமாரியாக அடித்தனர். விசாரணைக்குப் பிறகு அஜித் குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சிவகங்கை மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அன்று இரவு உறவினர்களுக்கு போலீசார் போன் மூலம் பேசி, அஜித்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசாரால் அஜித் குமார் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மேலும் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணையும் சிபிஐ வசம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளன.
100 பவுன் 200 பவுன், என்று நகைகள் திருட்டு போன வழக்கில் எல்லாம் காட்டாத அவசரத்தை 10 பவுன் நகைக்காக போலீஸ் காண்பித்தது ஏன்? யார் இந்த நிகிதா மற்றும் சிவகாமி? இவர்களின் பின்னணி என்ன..?, மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன.
சாவியை ஒப்படைத்தது ஏன்?
* கோயிலுக்கு வந்த பெண்கள் 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..?
* மதுரையில் இருந்து 25 கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்த மகள் நிகிதா... பின் சீட்டில் நகை வைக்கப்பட்ட அந்த காரின் சாவியை... முன் பின் பழக்கம் இல்லாத 3ஆம் நபர் ஒருவரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனது ஏன்..?
* காரின் பின்பக்கத்தில் நகையை வைத்துக்கொண்டு முன்பின் தெரியாத காவலாளியிடம், காரின் சாவியை ஏன் ஒப்படைக்க வேண்டும். இத்தனைக்கும் தனக்கு கார் ஓட்டவே தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு கார் சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்..?
பார்க் செய்த அந்த 4வது நபர் யார்?
* காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு ஏன் அம்மா மகள் இருவருக்கும் அப்போது ஏற்படவே இல்லை?
* அஜித்திடம் சாவியை பெற்று காரை எடுத்து ஓட்டி பார்க் செய்த அந்த 4வது நபர் யார்.? நகை காணவில்லை என்றதும், நகைக்கு சொந்தக்காரர்கள், 7 கிமீ அருகேயுள்ள திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளூர் போலீசிடம் புகார் அளித்தார்களா..?
* 30 கிமீ தூரமுள்ள மானாமதுரையில் இருந்து யூனிஃபார்ம் அணியாமல் போலீஸ் தனிப்படை ஒன்று மடப்புரம் கோயிலுக்கு விசாரணைக்காக வந்தது ஏன்?
* அருகில் உள்ள திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்..?
* தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என முதலில் போலீசார் FIR போட்டது ஏன்..?
புகார் அளித்தவர்களின் பின்னணி என்ன?
* உயர் அதிகாரிகளின் உத்தரவின் படிதான், போலீசார் இதைப்போன்று சட்ட விரோதமான கொடூரத்தில் ஈடுபட்டதாக போலீசாரின் குடும்பத்தினர் தர்ணா போராட்டம் செய்தனர். அவர்கள் சொல்கிறபடியே வைத்து பார்த்தாலும் கீழ்நிலை காவலர்களுக்கு சட்ட விரோதக் ஆர்டர் போட்டது யார்? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கைதாகி சிறை செல்ல வேண்டிய அந்த உயர் அதிகாரிகள் யார்..?
* இதைவிட அதிகளவில்.. 100 பவுன் 200 பவுன்.. என்று நகைகள் திருடு போன வழக்கில் எல்லாம் மெத்தனம் காட்டும் போலீஸ்.. 10 பவுன் நகைக்காக போலீஸ் இத்தனை தீவிரமாக உடனடி நடவடிக்கையில் இறங்கியது ஏன்..?
* நகை திருடுபோனதாக புகார் அளித்தவர்களின் பின்னணி என்ன? என இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் நிலவுகின்றன. இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை தரவேண்டியது காவல்துறையின் பொறுப்பு..
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications