100 நாள் திட்டம் எங்கே? ஜேபி நட்டா போட்ட உத்தரவு! அலர்ட் ஆன அதிகாரிகள்?
சென்னை: ஜேபி நட்டா மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே 100 நாள்களுக்கான திட்டங்களைத் தயார் செய்யும் படி உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராக இருந்த ஜேபி நட்டா மத்திய அமைச்சராகக் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு மத்திய சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நேற்று முறைப்படி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளதால் விரைவில் பாஜக தேசிய தலைவராக வேறு ஒருவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட உள்ளது. நட்டாவின் பதவிக் காலம் கடந்த 2023 ஜனவரியுடன் முடிவடைந்தது.
ஆனால், மக்களவைத் தேர்தலை நாடு சந்திக்க இருந்ததால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இதுவரை பாஜகவின் தேசிய தலைவராகப் பதவியிலிருந்தவர்கள் மத்திய அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றதும், அடுத்த கட்டமாகக் கட்சிப் பதவியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.
அப்படித்தான் 2014 ராஜ்நாத்சிங் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னதாக பதவியேற்ற அமித்ஷா 2019க்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
அதேபோல் நட்டாவும் மாற்றப்படவுள்ளார். இவருக்குப் பின் பாஜக தேசிய பதவி சிவராஜ் சிங் சவுகானுக்கு வழங்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. அப்படி இல்லை என்றால் தர்மேந்திர பிரதான் அல்லது பூபேந்திர யாதவ் ஆகிய இருவர்களில் யாரேனும் ஒருவருக்கு வழங்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறிவந்தன.
ஆனால், இப்போது இந்த மூன்று பேருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், யார் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில்தான் நட்டா பதவியேற்றவுடன் அடுத்த 100 நாள்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கட்டளைப் போட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மத்திய அமைச்சர் நட்டா, பொறுப்பேற்ற உடன் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அவர் முதல் 100 நாட்களுக்கு மோடி 3.0 அரசின் நிகழ்ச்சிகளின் பட்டியலைத் தயார் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.
"அமைச்சகத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி தகல் தந்துள்ளார்.
குறிப்பாக நட்டா, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்ததாக விஷயம் அறிந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
பாஜகவின் தேசிய தலைவராக தற்போது உள்ள ஜே.பி. நட்டா 1960 டிசம்பர் 2ஆம் தேதி பீகாரில் பிறந்தவர். மூன்று முறை இமாச்சலப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1998 முதல் 2003 வரை இமாச்சலப்பிரதேச மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைத்தாராக பணியாற்றினார்
மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 2020 இல் இவர் முழு நேர பாஜக தலைவரானார்.
நட்டாவுக்கு மத்திய சுகாதாரத்துறையுடன் சேர்த்துக் கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதாப் ராவ் கணபத்ராவ் ஜாதவ் சுகாதாரத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அனுப்ரியா படேல் சுகாதாரத் துறையை அடுத்து ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இவர்களும் நேற்றைய கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications