வரும் சனிக்கிழமை 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் கிடையாது.. வெளியானது முக்கிய அறிவிப்பு!
சென்னை: வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறை என்பதால் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் வாயிலாக இதுவரை 92,836 பேர் பயன் பெற்றுள்ளனர்.

நலம் காக்கும் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு, மருத்துவம் சார்ந்து, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' எனும் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுக்க, 1256 இடங்களில் உயர்தர மருத்துவ மையங்களில் இந்தத் திட்டம் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
17 துறைகளில்
இந்தத் திட்டம், 17 சிறப்பு மருத்துவத் துறைகளை உள்ளடக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், புற்றுநோய் பாதிப்புகளை முகாம்களிலேயே கண்டறிந்து, கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்று பல்வேறு வகைகளிலான ஆண், பெண் என்று இரு பாலருக்குமான புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறிகின்ற பணிகளும் நடத்தப்படுகிறது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறுகிறது.
மருத்துவ முகாம்கள்
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அங்கேயே பரிசோதனை மேற்கொண்டு, அங்கேயே மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெறலாம். புதிய பயனாளர்கள் எளிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்.
ஓராண்டு காலத்திற்குப் பொதுமக்களுக்கு இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த முகாம்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அவர்களிடத்திலேயே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் இருக்கும்.
வரும் சனிக்கிழமை முகாம் கிடையாது
இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற முகாம்களில் 92,836 பேர் பயன் பெற்றுள்ளனர். இந்நிலையில் வரும் 16 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறை என்பதால் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரம் சனிக்கிழமை ஆகஸ் 16 ஆம் தேதி அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும். ஆறு மாதங்களில் 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications