Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 முறையல்ல; 4 முறை நேரு பிரதமர்! மோடிக்கு முன்பே 3 முறை பிரதமராக இருந்த இந்திரா காந்தி, வாஜ்பாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேருவை தொடர்ந்து 3ஆவது முறையாகப் பதவியேற்று அந்தச் சாதனையை மோடி சமன் செய்துள்ளார் என்று சொல்வது உண்மையல்ல. அதற்கு முன்பே அந்தச் சாதனையை இந்திரா காந்தியும் வாஜ்பாயும் செய்துவிட்டனர்.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பதவியேற்றதும் பல ஊடகங்கள் அவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையைச் சமன் செய்துவிட்டார் என்று எழுதின.

Lok Sabha Election 2024 Jawaharlal Nehru Atal Bihari Vajpayee Indira Gandhi Narendra Modi

அதாவது நேருவுக்குப் பின்னர் மோடிதான் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார் என்பது பல்வேறு ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருந்தது.

நேரு இந்திய நாட்டிற்கு மூன்று முறை பிரதமராக இருக்கவில்லை. அவர் 4 முறை பிரதமராகப் பதவியிலிருந்தார். அவர் முதல் முறை பிரதமர் பதவியேற்ற வருடம் 1947. அப்போது பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு முழுமையாக வெளியேறவில்லை.

அப்போது சுதந்திரம் வழங்குவதற்கு முன்னோட்டமாக ஒரு இடைக்கால அரசு 1946இல் அமைக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார்.

அதன்பின்னர் 1952 இல் பதவியேற்றார். மீண்டும் 1957இல் பிரதமரானார். அடுத்ததாக அவர் பதவியேற்றது 1962.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று நேரு ஆட்சி அமைத்திருந்தாலும், அதற்கு முன்பே அவர் பிரதமராக ஒருமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிட்டார். ஆகவே, அவர் இந்தியாவின் முதல் பிரதமர். கூடவே 5 முறை பதவியிலிருந்த பிரதமர்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் நேருவின் சாதனையை மோடி சமன் செய்யவில்லை. எப்படி என்கிறீர்களா?
அவர் சுதந்தரம் பெறுவதற்கு முன்பு பிரதமராகப் பதவியேற்ற முதல் அவர் 1964 வரை மொத்தம் 5 முறை பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

அதைப்போலவே விடுதலைக்குப் பின் நடைபெற்ற 3 பொதுத் தேர்தல்களில் நேரு பெற்ற தொகுதிகளின் அளவு வேறு. மோடி வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை வேறு. மலைக்கு மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.

முதல்முறை நேரு வெற்றி பெற்ற போது வென்ற மொத்த தொகுதிகள் 364. மோடி முதல்முறை ஆட்சி அமைத்த போது வென்ற தொகுதிகள் மொத்தம் 282. 2வது முறை 371 சீட்டுகளைப் பெற்றார். இது முன்பு வாங்கியதைவிட அதிகம். மோடி 2வது முறை பெற்ற சீட்டு மொத்தம் 303 தான்.

அடுத்ததாக மூன்றாவது முறை நேரு ஆட்சி அமைத்த போது 361 தொகுதிகளில் வென்றார். இப்போது மூன்றாவது முறையாக மோடி 240 தொகுதிகளில்தான் வென்றுள்ளார்.

நேரு ஆட்சி அமைத்தது மெஜாரிட்டியுடன். ஆனால், மோடி ஆட்சி அமைத்தது மைனாரிட்டி ஆட்சி. ஆகவே அவர் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து ஆட்சி அமைத்துள்ளார்.

இவை போக இன்னும் சொல்ல வேண்டிய விசயங்கள் இருக்கின்றன.

அது என்ன? என்றால், நேருவின் சாதனையை இதுவரை வேறு எந்த பிரதமரும் முறியடிக்கவில்லை. அடுத்துத் தொடர்ந்து மூன்று முறை நேருவுக்குப் பின் மோடி ஆட்சி அமைத்துள்ளார் என பாஜக சொல்கிறது இல்லையா? அது கூட முழு உண்மை இல்லை.

ஏனென்றால், மோடிக்கு முன்பே பாஜக சார்பாக நாட்டை ஆண்ட முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார். அதாவது 1996 அடுத்து 1998 அதன் பின்னர் 1999 எனத் தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.

இவருக்கு முன்னதாக இந்திரா காந்தி இதே சாதனையைச் செய்துள்ளார். அவர் தொடர்ந்து நான்கு முறை பிரதமராக இருந்துள்ளார்.

அதாவது 1966, 1967, 1971 தொடர்ந்து பிரதமராக இருந்த இவர் அதனைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டும் பிரதமரானார்.

ஆக, மோடிக்கு முன்பே இந்திரா காந்தியும் வாஜ்பாயும் மோடியின் சாதனையைச் செய்துவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+