Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதும் தனித்துவமானது. இங்குள்ள மாநிலக் கட்சிகள், வேட்பாளர் தேர்வில் காட்டும் வேகம் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது...இப்போதும் அப்படிதான் களத்தில் பல திணறல்களை காண முடிகிறது.. அதை பற்றி இங்கே நாம் சுருக்கமாக பார்ப்போம்..!!

அதிமுக, திமுக போன்ற பெரும் திராவிட இயக்கங்கள் மட்டுமின்றி, சின்ன சின்ன உதிரி கட்சிகள் கூட தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தில் குதித்துவிடுகின்றன.

TN Politics

தேசிய கட்சிகள்

ஆனால், டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட தேசிய கட்சிகள் மட்டும் வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாமல் கடைசி நிமிடம் வரை தவிப்பதும், இதனால் மற்ற கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த தாமதத்திற்கும், குளறுபடிகளுக்கும், பின்னணியில் இருக்கும் மிக முக்கியமான காரணம், அதிகாரப் பரவலாக்கல் இல்லாததுதான்.. அதாவது தமிழகத்தில் இயங்கும் தேசிய கட்சிகளின் கிளைகளுக்கு என்று தனிப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது..

அதேபோல மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், இணைப் பொதுச் செயலாளர்கள் எனப் பதவிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும், ஒரு சிறிய முடிவை எடுப்பதற்கு கூட டெல்லியின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது...

அதாவது தமிழகத்தின் கள நிலவரத்தையும், தொகுதிகளின் சாதக பாதகங்களையும் நன்கு அறிந்த செல்வபெருந்தகை அல்லது நயினார் நாகேந்திரன் போன்ற தலைவர்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படுவதில்லை என்பதே இங்கு ஒரு கசப்பான உண்மை.

தமிழகத்தின் நாடித்துடிப்பு

தமிழகத்தின் உண்மையான அரசியல் நாடித் துடிப்பு என்ன என்பது இங்குள்ள தலைவர்களுக்கே தெரியும். ஆனால், டெல்லியில் உள்ள மேலிடமோ, பெரும்பாலும் ரகசிய புகார்களை நம்பியே காய்களை நகர்த்துகின்ற கட்சியின் நலனுக்காக உழைப்பவர்களை விட, டெல்லிக்கு சென்று தங்களை சிறப்பாகக் கவனிக்கும் தலைவர்களின் சொற்களுக்கே அங்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதாக முணுமுணுப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் எழுந்து அடங்குவது வாடிக்கையாகும்.

அதேபோல டெல்லியில் இருந்து தமிழகம் வரும் மேலிட பார்வையாளர்களை கவனிப்பதில் காட்டும் ஆர்வம், களப் பணியில் காட்டப்படுவதில்லை என்ற சலசலப்பும் இருக்கத்தான் செய்கிறது..

அதனால்தான் ஆளாளுக்கு ஒரு வேட்பாளரைப் பரிந்துரைக்கவும், அதில் யாரைத் திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் மேலிடத் தலைமை குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார்களாம். இந்த குழப்பம் காரணமாகவே வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தொடர்ந்து தள்ளிப்போகிறதாம்..

வழக்கமான இதே சூழல்தான் இந்த தேர்தலிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் நெருங்கும் நேரத்தில், மற்ற கட்சிகள் தொகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக இருக்க, தேசிய கட்சிகளோ பரபரப்பின்றி காணப்படுகிறதாம்..

திராவிட கட்சிகளின் வலிமை

இதுகுறித்து நாம் சில அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: "மாநில தலைவர்களுக்கு உரிய அதிகாரமும், சுதந்திரமும் வழங்கப்படாத வரை, தேசிய கட்சிகள் தமிழக மண்ணில் வேட்பாளர் தேர்வில் பின்தங்கியே இருக்கும்.

தேசிய கட்சிகளின் இந்த தடுமாற்றத்திற்குப் பின்னால் உள்ள மிக முக்கியமான அம்சம் "அதிகாரக் குவிப்பு".. ஒரு மாநிலத்தின் வேட்பாளரை தீர்மானிக்க அந்த மண்ணின் சமூகக் கட்டமைப்பு, சாதியச் சமன்பாடுகள் மற்றும் உள்ளூர் செல்வாக்கு ஆகியவற்றை நுணுக்கமாக அறிய வேண்டியது அவசியம்.

ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லியில் உள்ள ஒரு சிறிய குழுவிடம் மட்டுமே தங்கியுள்ளது. இதனால் மாநிலத் தலைவர்கள் வெறும் "பரிந்துரையாளர்களாக" மட்டுமே சுருங்கிவிடுகின்றனர்.

எப்போது நிலைமை மாறும்?

அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளை விட, மேலிடப் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தும் நபர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுவதால், தேர்தல் களத்தில் இக்கட்சிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மாநிலத் தலைமைக்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படாத வரை, தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஒரு "மாற்று சக்தியாக" உருவெடுப்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்...

தேசிய கட்சிகள் தங்களின் உட்கட்சி பூசல்களையும், டெல்லி மேலிட உத்தரவுகளையும் மட்டுமே நம்பி காலத்தைக் கடத்தினால், தமிழகத்தில் எப்போதும் "திராவிடக் கட்சிகள் தான் முதலமைச்சர்களாக இருப்பார்கள்" என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+