நீட் விலக்கு விவகாரம்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்கும் அண்ணாமலை.. என்ன காரணம் தெரியுமா
சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று இங்குள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. அதிமுக ஆட்சியிலேயே இது தொடர்பாகச் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை.

இதையடுத்து திமுக அரசு அமைந்ததும் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக உள்ளதாகவும் நீட் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக நாளை (பிப். 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார்.
Recommended Video
இந்தச் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநருக்கு அண்ணாமலை நன்றி தெரிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications