முடக்குவாதத்தால் 15 நாளாக வடிவேல் பாலாஜி அவதி.. யாரேனும் உதவியிருக்கலாமே!.. ரசிகர்கள் கண்ணீர்
சென்னை: பல லட்சக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த கலைஞன் வடிவேல் பாலாஜி இன்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி மாரடைப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் வடிவேல் பாலாஜி குறித்த நினைவலைகளை ட்விட்டர்வாசிகள் பகிர்ந்த வண்ணம் உள்ளார்கள்.

ஆன்மா
வடிவேல் பாலாஜியின் மரணம் எதிர்பாராத ஒன்று. என் இதயமே நொறுங்கிவிட்டது. என்னா வருஷம் இது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என்கிறார் இந்த வலைஞர்.

குறைந்தபட்சம்
யாராவது வடிவேல் பாலாஜிக்கு உதவியிருக்கலாம். குறைந்தபட்சம் விஜய் டிவியாவது உதவியிருக்கலாம். 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு பில்ராத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பணம் செலுத்த முடியாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இன்றைய தினம் உயிரிழந்தார்.

வடிவேல் பாலாஜி
சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி. அவரது ஆன்மா சா்நதியடையட்டும் என்கிறார் இந்த வலைஞர்.

மரணச் செய்தி
வடிவேல் பாலாஜியின் மரணச் செய்தியை கேட்டு இதயம் வலிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்கிறார் இந்த வலைஞர்.

நினைவுகள்
வடிவேல் பாலாஜி சிறந்த காமெடியன். சிரிச்சா போச்சு என்னுடைய ஃபேவரைட் ஷோ. உங்கள் நினைவுகள் எங்களுடன் இருக்கும் என்கிறார் இந்த வலைஞர்.

வடிவேல் பாலாஜி உயிரிழப்பு
15 நாட்களுக்கு முன்னர் வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பில்ராத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பணம் செலுத்த முடியாமல் போனது. பின்னர் கை, கால் முடக்குவாதம் ஏற்பட்டு விஜயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு படுக்கை வசதி இல்லாததால் அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications