Memes: மக்களை மிரள வைத்த பண மதிப்பு நீக்கம்.. 5ஆம் ஆண்டை மீமீஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: இன்றுடன் பண மதிப்பு நீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் முடியும் நிலையில், இது தொடர்பான பல்வேறு மீமீஸ்களையும் உருவாக்கித் தெறிக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
சரியாக 5 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இரவு 8.15 மணியளவில் தொலைக்காட்சி தோன்றிய பிரதமர் மோடி, திடீரென ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
பிரதமர் இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பொதுமக்களிடையே பரபரப்பும் பதற்றமும் அதிகமானது.

பண மதிப்பு நீக்கம்
ஏனென்றால் ஒறே நாளில் நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் 86 சதவீதத்தைச் செல்லாது என அறிவிக்கப்பட்டது சாதாரண நடவடிக்கை இல்லை. பெரும் பணக்காரர்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய அரசு முதலில் அறிவித்தது. ஆனால், இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தான்.

பிரதமர் மோடி
தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 100ஐ எடுக்கவே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். முதலில் கருப்புப் பணம், அடுத்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை, அடுத்து கள்ள நோட்டுகள், அடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என பணமதிப்பு நீக்கத்திற்கு மத்திய அரசு பல காரணங்களைச் சொன்னது. இருப்பினும் இதனால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த நாளுக்குப் பிறகு தான் பிரதமர் தொலைக்காட்சியில் பேசப்போகிறார் என்றாலே அதை மக்கள் அச்சத்துடனேயே அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ட்விட்டர் டிரெண்டிங்
இந்தச் சூழலில் இன்றுடன் பண மதிப்பு நீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் முடியும் நிலையில், #DemonetisationDisaster, #Black_Day_Indian_Economy ஆகிய ஹேஷ்டேக்குகள் இணையத்தில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் வங்கிகளில் நீண்ட வரிசையில் வயதானவர்கள் நிற்கும் படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பண மதிப்பு நீக்கம் தொடர்பான பல்வேறு மீமீஸ்களையும் உருவாக்கி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Burn me alive
பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் பெரிதும் வைரலானது என்றால் புதிய ரூ 500 மற்றும் ரூ 2000 நோட்டில் சிப் உள்ளது என்பது தான். நம்ம ஊர் எஸ்வி சேகர் தொடங்கி தேசிய அளவில் பல ஊடகங்களிலும் கூட வெளியானது. ஒவ்வொரு ஆண்டும் பண மதிப்பு நீக்கம் நாளில் மறக்காமல் பகிரப்படும் மீம்களில் இதுவும் ஒன்று. அதேபோல, பண மதிப்பு நீக்கம் அறிவித்த சமயத்தில் 50 நாட்களில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் பொதுமக்கள் தன்னை உயிருடன் எரித்துவிடலாம் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான மீம்களும் வைரலாகி வருகிறது.

பொருளாதாரம் நாசம்
நன்றாக சென்று கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தை நாசமாக்கவே இந்த பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறது இந்த மீம்.

பிரதமரின் உடை
பிரதமரின் உடைகளுக்கு ஏற்ப நாட்டின் பணம் இருக்க வேண்டும் என்பதற்காகவே பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டதாகக் கிண்டல் செய்கிறார் இவர்.

மலர் வளையம்
மேலும், 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது போன்ற மீம்களும் வைரலாகி வருகிறது.
-
பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications