வீடு, மனை வாங்குவோர் இனி யாருமே ஏமாற மாட்டீங்க.. 'பட்டா மாறுதல்' விபரம்.. வரப்போகுது அருமையான வசதி
வீடு, மனை வாங்குவோர், சொத்து பரிமாற்றத்தின் போது மோசடியில் சிக்கிகுவதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்திருக்கிறது. அந்த வகையில் மோசடியை தடுக்க பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் புது வசதியை வருவாய் துறை ஏற்படுத்த உள்ளது.
அதன்படி வீடு, மனை வாங்குவோர் சொத்து விவரங்கள் மற்றும் அதில் உள்ள வில்லங்கங்களை அறிய வேண்டும் என்றால், இனி மிகவும் எளிது.
சர்வே எண் வாரியாக, பட்டா மாற்றம் தொடர்பான முந்தைய விபரங்களை தொகுத்து அளிக்கும் புதிய வசதியை, வருவாய் துறை அறிமும் செய்ய போகிறது. இதன் மூலம் தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர் வில்லங்கமான சொத்துக்கள் மற்றும் அரசு சொத்துக்களை வாங்கி ஏமாற வேண்டியதில்லை.

அரசு நிலங்ககளை ஏமாற்றி விற்பது, பஞ்சமி நிலங்களை ஏமாற்றி விற்பது, அரசால் கையகப்படுத்தப்பட்ட அனாதி நிலங்களை விற்பது, ஆற்றின் கரையோரங்களில் உள்ள இடங்களை விற்பது, நீர்வழித்தடங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளவர்கள் அதை யாருடைய தலையிலாவது கட்டிவிடலாம் என்று முயற்சிப்பது, அரசு பூங்கா, ரேஷன் கடை, தண்ணீர் தொட்டி போன்ற பயன்பாட்டிற்காக வைத்துள்ள நிலங்களை, ஆக்கிரமித்து குடியேறி அதை யாருக்காவது விற்பது போன்றவை நடக்கிறது.
இதேபோல் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து விற்பது, குத்தகை நிலங்களை ஏமாற்றி விற்பது, வேறுஒருவரின் நிலத்தை தன் நிலம் என்று போலிஆணங்கள் தயாரித்து அதனை உடனே வேறு ஒருவருக்கு விற்பது என பல மோசடிகள் அரங்கேறுகின்றன. இதேபோல் கூட்டுப்பட்டா உள்ள வீட்டை அல்லது நிலத்தை அவர்களது குடும்பத்தில் ஒரே ஒருவர் ஏமாற்றி பட்டா வாங்கியிருப்பார். அதை உடனே வேறு ஒருவர் தலையில் கட்டுவது நடக்கும்.. இதேபோல் அரசு இலவசமாக கொடுத்த நிலத்தை வாங்கியவர்கள் வேறு ஒருவருக்கு மாற்றுவது என இப்படியும் சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது. இப்படிப்பட்ட நிலத்தில் உள்ள வாங்கி வீடு மனைகளை வாங்கி மக்கள் ஏமாறக்கூடாது என்று முடிவு செய்துள்ள தமிழக அரசு சர்வே எண் வாரியாக, பட்டா மாற்றம் தொடர்பான முந்தைய விபரங்களை தொகுத்து அளிக்கும் புதிய வசதியை பெறலாம். இந்த வசதியை அளிக்க காரணமும் இருக்கிறது.
ஏனெனில் முந்தைய பத்திரப்பதிவு விபரங்களை அறிய, சொத்து வாங்குவோர் வில்லங்க சான்றிதழ் பெறுகின்றனர். இதன் வாயிலாக, சொத்தில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை எளிதாக அறிய முடியும். அதேநேரம், சொத்தின் பட்டா யார் பெயரில் உள்ளது; இதற்கு முன் யார் யார் பெயரில் இருந்தது என்ற விபரங்களை வில்லங்க சான்றிதழை வைத்து அறிய முடியாது. அதனால், சிலர் போலியாக பட்டா தயாரித்து, மக்களை மோசடி செய்வது நடக்கிறது. குறிப்பாக சொல்வது என்றால், நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அறநிலையத்துறை நிலங்கள் போன்ற நிலங்கள் விற்கப்படுகிறது. எனவே இந்த மோசடியாக விற்பதை தடுக்க, நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அறநிலையத்துறை நிலங்களின் வழிகாட்டி மதிப்பு நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலங்களுக்கான சர்வே எண்கள், சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. இருப்பினும், முன்னதாகவே பல இடங்களில் அரசு மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமாக நிலங்கள், போலி பட்டாக்கள் வாயிலாக அபகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பட்டா இருக்கிறது என்று நினைத்து பொதுமக்களும் இந்தச் சொத்துக்களை வாங்கி ஏமாறுவது நடக்கிறது.
எனவே ஏமாறுவதை தடுக்க ஒரு குறிப்பிட்ட சர்வே எண், எந்தெந்த காலத்தில் யார் யார் பெயருக்கு உட்பிரிவு செய்துள்ளாரக்ள்.. அதன் மொத்த பரப்பளவு என்ன; தற்போது விற்கப்படும் பரப்பு உண்மையிலேயே பட்டாவுக்கு உட்பட்டதா என்பதை இனி வருவாய் துறையின் மூலம் அறிய முடியும்.
சொத்து பரிமாற்றத்திற்கு எப்படி வில்லங்க சான்று இருப்பது போல், பட்டா பரிமாற்றத்திற்கும் தகவல் தொகுப்பு விஏஓ அலுவலகங்களில் உள்ளது. இந்த விபரங்களை, பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக அறிய, புதிய வசதி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு சொத்தை வாங்கும் நபர், அது குறித்த சர்வே எண்ணை உள்ளீடு செய்தால், அந்த சர்வே எண்ணில், இதற்கு முன் நடந்த பட்டா மாற்ற விபரங்களை எளிதாக பார்க்க முடியும்.
இதன்படி, சர்வே எண்ணில் புதிது புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து உட்பிரிவு எண்கள், அதற்கான பரப்பளவு, யார் பெயரில் வழங்கப்பட்டது, எப்போது வழங்கப்பட்டது போன்ற விபரங்கள், தொகுப்பாக முழு விபரம் அறிந்து, சொத்துக்களை வாங்கலாம். இந்த வசதி அறிமுகம் ஆனால் போலியாக ஒரு பட்டாவை தயாரித்து நில மோசடி செய்வது இனி யாரும் ஏமாற்ற முடியாது.
இன்னொரு சூப்பர் வசதி: எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிசிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை பெற முடியும்.
கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கின்றன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதேபோல் நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.
இதேபோல் எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிசிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப் பட்டியல் போன்றவற்றை பொதுமக்கள் https://tnlandsurvey.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications