திமுக எம்பி வீட்டிற்கு வந்த புதிய வருமான வரித் துறை டீம்! ஜெகத்ரட்சகனின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: திமுக எம்பி ஜெகதன்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்த புதிதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்த போது அவர் சிரித்தபடியே அவர்களை வரவேற்றார்.
சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை இன்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்டு வருகிறது. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரிகள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகளில் ஆயுதப்படை பாதுகாப்புடன் நேற்று காலை 6 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் 10 -க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திநகரில் உள்ள நட்சத்திர விடுதி, தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அது போல் படப்பையில் உள்ள கல்லூரி பணியாளர் ஒருவரி வீட்டு பூட்டை உடைத்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு ஜன்னல்கள்,கதவுகள் பின்னால் ரகசிய அறைகள் இருக்கின்றனவா என சோதனை செய்தனர். மேலும் அவருடைய வீட்டில் புதிதாக பூசப்பட்ட சுவற்றில் ஏதேனும் அறை இருக்கிறதா என தட்டி பார்த்தனர். மேலும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சொகுசு கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தண்டலம் சவீதா கல்விக் குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ 10 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெகத்ரட்சகன் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நாளையும் இந்த சோதனை தொடரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு புதிதாக வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு உள்ளே சென்றனர். அப்போது அவர்களை ஜெகத்ரட்சகன் சிரித்தபடியே வரவேற்றார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications