உதட்டில் பல தையல்.. ஒரு ஆணுக்கு 2 பெண்கள் போட்டி.. சென்னை புழல் சிறையில் பெண்ணின் உதட்டை கடித்த கைதி
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்குள் நடந்த மோதல், மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துவிட்டது. இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை புழல் மத்திய சிறையில், பெண்கள் பிரிவில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.. இதில், நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 பெண் கைதிகளும் அடக்கம்.

இவர்களது பெயர் மோனிகா (31), கிளாரக்கா (32) என்பதாகும்.. இவர்கள் இருவருமே நைஜீரிய நாட்டிலிருந்து போதைபொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விசாரணை பிரிவில் இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்... இதே கடத்தல் வழக்கில், நைஜீரிய நாட்டு இளைஞர் ஒருவரும் கைதாகி, புழல் சிறையின் ஆண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.
யாரிந்த இளைஞர்: இந்த நைஜீரியா இளைஞரை, மோனிகா, கிளாரக்கோ இருவருமே காதலித்து வருவதாக கூறப்படுகிறது.. நேற்று மாலை வழக்கம்போல், பார்வையாளர் சந்திப்பு நேரம் வந்தது.
அப்போது, சிறைத்துறை அனுமதியுடன் விசாரணை பிரிவிலுள்ள நைஜீரிய ஆண் காதலருடன், கிளாரக்கோ பேசிக் கொண்டிருந்தார்.. அவரிடம் பேசிவிட்டு, தன்னுடைய சிறை ரூமுக்கு கிளாரக்கோ திரும்பி சென்றுள்ளார்..
வாக்குவாதம்: அதே அறையிலிருந்த மோனிகா, என்னுடைய காதலருடன் நீ எப்படி பேசலாம்? என்று கேட்டு கிளாரக்கோவிடம் தகராறு செய்துள்ளார்.. இவர்களது தகராறு வாக்குவாதமாக முற்றி, கைகலப்பில் போய் முடிந்தது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மோனிகா, கிளாரக்கோவின் உதட்டை சரமாரியாக கடித்துவிட்டார்.. இதில் ரத்தம் கொப்பளித்து, கிளாரக்கோ அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதை பற்றிய தகவலறிந்ததுமே, சிறைக்காவலர்கள் விரைந்து வந்து கிளாரக்கோவை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்... மருத்துவமனையில் கிளாரக்கோவின் உதட்டில் தையல்கள் போடப்பட்டன.. தொடர்ந்து தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை: இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிகாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு ஆண் நண்பருக்கு 2 பெண்கள் சண்டை போட்டுக் கொண்டதும், இதில், சக கைதியின் உதட்டை, இன்னொரு நைஜீரிய பெண் கடித்துவிட்டதும், பெரும் பரபரப்பை புழலில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications