அதிகாலை தொடங்கும்.. "அந்த கண்" கடக்கும் போதுதான் சிக்கல்.. நிவர் ஆட்டமே இனிமேல்தான்.. கவனம்!
சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இன்றே அதிக அளவில் மழை பெய்து வருகிறது.. ஆனால் உண்மையான தாக்கம் நாளை அதிகாலைதான் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தை நாளை நிவர் புயல் தாக்க உள்ளது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து உள்ளது.
நிவர் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் புயல் தமிழகத்தில் சென்னை மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் எப்படி கரையை கடக்க போகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

தகவல்கள்
அதன்படி இந்த புயல் தற்போது எங்கும் நகரவில்லை. சென்னையில் இருந்து 400 கிமீ தொலைவில் அப்படியே நிலைகொண்டு இருக்கிறது. இதனால் தற்போது சென்னையில் கொஞ்சம் மழை குறைந்துள்ளது. புயலுக்கு முன் அமைதி என்பார்களே அந்த அமைதிதான் இது.

என்ன நடக்கும்
தற்போது நகராமல் இருக்கும் நிவர் புயல் கொஞ்சம் கொஞ்சமாக பலம் பெறும். சாதாரண புயல் இன்று இரவிற்குள் தீவிர புயலாக உருவெடுக்கும். நள்ளிரவில் அதி தீவிர புயலாக மாறும். அதன்பின் அதிகாலையில் புயல் சென்னைக்கு அருகில் வரும். நாளை எப்போது வேண்டுமானாலும் இந்த புயல் கரையை கடக்கும். ஆனால் அதிகாலையில் இதன் தாக்கம் தெரிய தொடங்கும் என்கிறார்கள்.

தாக்கம்
நாளை காலைக்குள் இந்த புயல் அதி தீவிரமாக மாறும் என்பதால்.. நாளை இன்று பெய்வதை விட அதிக மழை பெய்யும். இன்று அடிப்பதை விட அதிக காற்று அடிக்கும். இன்று இருக்கும் கடல் கொந்தளிப்பை விட அதிக கொந்தளிப்பாக இருக்கும்.

ஆட்டம்
அதாவது நிவர் புயலின் உண்மையான ஆட்டமே நாளை அதிகாலைதான் தொடங்கும். அதேபோல் பொதுவாக ஒரு புயலின் கண் பகுதி கரையை கடக்க 2-3 மணி நேரம் ஆகும். அதாவது புயலின் மையம் போன்ற பகுதி கரையை கடக்க 2 மணி நேரம் வரை ஆகலாம். ஆனால் நிவர் புயலின் கண் பெரிதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரிதாக இருக்கும்
இதனால் ஒருவேளை நிவரின் கண் பகுதி கடக்க கூடுதல் நேரம் எடுக்கலாம். ஆனாலும் பாதிப்பு கொஞ்சம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த கண் பகுதி கடக்கும் முன்பும், பின்பும் சென்னையில் அதிக மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் மட்டும் மக்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications