தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து ஆகிறதா? பள்ளி கல்வித்துறை விளக்கம்
சென்னை: தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரும் 12 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்து விட்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்ற நடைமுறை இருந்து வந்ததை கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றி அமைத்து 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதால் 11 ஆம் வகுப்புகளில் பாடங்களை நடத்தாமலே சில பள்ளிகள் 12 ஆம் வகுப்பு பாடத்தை நடத்துவதாக கூறப்பட்ட நிலையில், 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாவே இந்த நடைமுறைதான் அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது 11 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து என்று தகவல் வெளியானது. இதனால் 11 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த தகவலை முற்றிலும் பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அளித்த விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், இந்த தகவலை முற்றிலும் பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை கூறுகையில், " 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தகவலில் எந்த உண்மையும் இல்லை. தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications