5 மாநில தேர்தல்.. 22 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் எந்த மாற்றமும் இல்லை!
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தொடர்ந்து இன்றும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 22 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே வலையில் விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. சர்வதேச சந்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 69.36 டாலரை தொட்டது. 2.62 டாலர் இது உயர்ந்தது. இதன்பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது.
தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து 22 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இந்தியால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைதான் இதுவரை விற்கப்பட்டதிலேயே அதிக விலை ஆகும்.
தற்போது சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 87.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications