Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோட்டையனுக்கு பதில் அளிப்பதற்காக வீடியோ வெளியிடவில்லை.. அதிமுக ஆர்பி உதயகுமார் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று காலையில் ஒரு வீடியோ வெளியிட்ட நிலையில், அது செங்கோட்டையனுக்கு பதில் அளிக்கும் வீடியோ என்று பரப்பப்பட்டது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆர்பி உதயகுமார், செங்கோட்டையனுக்கு பதில் அளிப்பதற்காக இந்த வீடியோ வெளியிடவில்லை என்று கூறியுள்ளார்.

அதிமுக நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் பங்கேற்காதது அதிமுகவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது என்று கூறி திடீரென இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய ஆர் பி உதயகுமார் கூறியதாவது:-

Udayakumar Sengottaiyan Edappadi Palaniswami

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மாவின் மறு உருவமாக அண்ணன் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். புரட்சித் தமிழர் எடப்பாடி அம்மாவின் ஆட்சி அமைவதற்கு கடுமையாக உழைத்து வருகிறார். மாவட்ட கழகத் தலைமைச் செயலாளர்கள் தலைமையில் நீங்கள் மேற்கொள்ள இருக்கும் திண்ணை பிரசாரம் மாபெரும் வரலாற்று பிரளயத்தை ஏற்படுத்தும்.

இன்று தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு பேராபத்து. தமிழகத்தில் இன்று ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கக்கூடிய நிகழ்வினை மெல்ல மெல்ல திமுக செய்துகொண்டு இருக்கிறது. தானும் தமக்கு பின்னால் தன் வாரிசும் தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று சொன்னால், கருணாநிதி குடும்பம் தான் தொடர்ந்து ஆள வேண்டும் என்று சொன்னால், குப்பனும், சுப்பனும், சாமானியனும், ஏழைகளும் எங்கே போவார்கள். ஆகவே தமிழகத்திற்கு விடுக்கப்படுகின்ற சவால் ஜனநாயகத்து விடுக்கப்பட்டிருக்கின்ற சவால். மக்களே நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது.. மக்களே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.. இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறினார் .

ஆர் பி உதயகுமார் திடீரென வீடியோ வெளியிட்டது, செங்கோட்டையனுக்கு பதில் அளிக்கும் வீடியோ என்று தகவல்கள் பரவின. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர் பி உதயகுமார் இந்த வீடியோ எதற்காக வெளியிட்டேன் என்பதற்கும் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காலையில் நான் வெளியிட்ட வீடியோவை அவரவர் பார்வையில் பார்த்து இருக்கிறீர்கள். யாருக்கும் பதில் அளிப்பதற்காக நான் வீடியோ வெளியிடவில்லை.

யார் மனம் புண்படும்படியோ நான் வீடியோ வெளியிடவில்லை. திண்ணை பிரசாரம் செய்வது குறித்து சொல்லவே, மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே நான் இந்த வீடியோ வெளியிட்டேன். ஆனால் பலரால் அது தவறாக பரப்பப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தற்போது புரட்சி தமிழர் எடப்பாடி அதிமுகவை வழிநடத்தி செல்கிறார் என்று கூறினார்.

அதிமுக உள்கட்சி மோதல்?

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓ பன்னீர் செல்வம், - எடப்பாடி பழனிசாமி இணைந்து கட்சியை நடத்தி வந்தனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வமும் நீக்கப்பட்டார். இதன் பின்னர் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுக்குள் வந்தது.

எனினும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்பவர்களில் செங்கோட்டையன் தரப்பும் ஒன்று என்று அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், அன்னூரில் கடந்த 9ஆம் தேதி பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

செங்கோட்டையன் பங்கேற்காதது ஏன்?

அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் பங்கேற்காதது பெரும் விவாதப்பொருளானது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும் எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை காண அவரது இல்லத்தில் குவிந்ததால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தகைய சூழலில் தான் ஆர் பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ செங்கோட்டையனுக்கு பதில் அளிக்கும் வகையில் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கும் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஆர் பி உதயகுமார் விளக்கமளித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+