ரவீந்திரநாத்தா? ஓபிஎஸ் கெட்டு போக காரணமே அவர் மகன்தான்.. புட்டு புட்டு வைத்த அரசியல் வல்லுனர்!

ஓ பன்னீர்செல்வம் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை இப்படி மோசமாக அவரின் இரண்டு மகன்கள்தான் காரணம், அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டுதான் ஓ பன்னீர்செல்வம் இப்படி செய்தார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், பொதுக்குழு கூட்டம் நடந்தது சரி என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. நாங்கள் திறமையாக வாதம் வைக்கவில்லையா என்று தோன்றுகிறது.

இதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை இவர்கள் வீழ்த்த பார்க்கிறார்கள். அதை அனுமதிக்க கூடாது. இவர்களின் செயல் சட்ட விதிகளுக்கு எதிரானது. இவர்களுக்கு யார் இந்த அனுமதியை கொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்வோம். தேர்தல் ஆணையம் இன்னும் பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுகுழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழு முடிவுகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் செல்வோம். உச்ச நீதிமன்றம் இன்னும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தேர்தல் ஆணையத்திடம் சொல்லுவோம். எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவிற்கு எதிராக நாங்கள் பதில் மனு தாக்கல் செய்வோம்., என்று கூறி உள்ளார். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இப்படி வழக்கு மேல் வழக்கு தொடுப்பது தவறு என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

 பேட்டி

பேட்டி

இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், சட்ட ரீதியாக எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.. வாய்ப்பு உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் சொல்கிறார். இன்னும் எத்தனை காலம்தான் ஓ பன்னீர்செல்வம் இப்படி சொல்லிக்கொண்டே இருக்க முடியும். என்ன கதை சொல்கிறார். கட்சி மோதலை கோர்ட் மூலம் தீர்க்கவே முடியாது. கட்சி மோதல் என்பது கட்சி மோதல் மட்டுமே. அதில் கோர்ட் தலையிட்டால் தீர்வு காண முடியாது. சிவில் கோர்ட்டிற்கு ஓ பன்னீர்செல்வம் சென்றால் பல ஆண்டுகள் ஆகும். அங்கே முடிவு வரவே பல ஆண்டுகள் ஆகும். ஓ பன்னீர்செல்வம் எளிதில் முடிவை பெற முடியாது. அப்போது அவர் என்ன செய்வார்? 10 - 20 வருடங்கள் ஆகும்.

சப்போர்ட்

சப்போர்ட்

ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் ஆதரவை கூட எண்ணிவிடலாம். ஓ பன்னீர்செல்வம் உடன் இருக்கும் நபர்களை பாருங்கள். இன்னும் 6 மாதத்தில் பாருங்கள். என்ன நடக்கும் என்று. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நான் சொல்கிறேன். எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து எடப்பாடி பக்கம் செல்வார்கள். அமைதியாக சென்றுவிடுவார்கள். அமைதியாக கட்சி ஒன்றாகிவிடும். ஓ பன்னீர்செல்வம் கூட அமைதியாக எடப்பாடி பக்கம் சென்றாலும் செல்வார். வாய்ப்பு கிடைத்தால் சமாதானமாக செல்ல தயாராகிவிடுவார்.

கஷ்டம்

கஷ்டம்

பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்ற அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்து வருகிறார். ஜெயலலிதா கூட தன்னை எதிர்த்தவர்களை சேர்த்துக்கொள்வார். ஆனால் எடப்பாடி அப்படி தனக்கு எதிரானவர்களை சேர்க்காமல் போனால் என்ன ஆகும்? ஓ பன்னீர்செல்வம், ஓ பி ரவீந்திரநாத் நிலைமை என்ன ஆகும்? ஓ பி ரவீந்திரநாத் அடுத்த வருட தேர்தலில் எங்கே நிற்பார். ஓ பன்னீர்செல்வம் இதில் தெளிவாக இருப்பார். தனது மகன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும். டிசம்பருக்குள் மகனுக்கு "பெர்த்" கிடைக்க வேண்டும்.

முயற்சி

முயற்சி

அதற்கான முயற்சிகளை செய்வார். எங்கே தனது மகனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பார்ப்பார். ஏனென்றால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அவர் மகன் முக்கியம். ஓ பன்னீர்செல்வம் கெட்டு போக காரணமே அவர் மகன்தான். ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை இப்படி மோசமாக அவரின் இரண்டு மகன்கள்தான் காரணம். அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டுதான் ஓ பன்னீர்செல்வம் இப்படி செய்தார். மகனின் பேச்சை கேட்டுக்கொண்டு ஓ பன்னீர்செல்வம் அவசரப்பட்டு இப்படி செய்துவிட்டார். அவர் பொறுமையாக இருந்திருக்கலாம். அவர் அமைதியாக பதவி வாங்கியிருக்க முடியும். ஆனால் மகன்கள் பேச்சை கேட்டு அவர் இப்படி செய்துவிட்டார், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+