Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண்ருட்டி காதுக்குள் கிசுகிசுத்த ஓபிஎஸ்.. “மருது அழகுராஜ் மேட்டரை சொல்லிடுங்க” உடனே வந்தது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட ஓபிஎஸ் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மருது அழகுராஜின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓபிஎஸ்ஸும், பண்ருட்டி ராமச்சந்திரனும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பாஜக கூட்டணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகிய நிலையில், பாஜகவுடன் தான் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் உறுதியாகத் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை.

O Panneerselvam and Panruti Ramachandran clears about marudhu alaguraj statement on bjp

ஓபிஎஸ் எங்கப்பா?: இதனால் பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டு அவர் கொடுக்கவில்லையா என கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால், ஓபிஎஸ் இதில் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.

பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வம் அட்டெண்டன்ஸ் போடுவார். ஆனால் இந்த முறை, கூட்டணி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்காதது விவாதங்களைக் கிளப்பியது. அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வர இன்னும் பாஜக தலைமை விரும்புவதால், ஓபிஎஸ்ஸை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்றும் பேச்சுகள் உலவி வருகின்றன.

மருது அழகுராஜ் பரபரப்பு கருத்து: இந்த நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மருது அழகுராஜ் இதுகுறித்து பரபரப்பு கருத்தைத் தெரிவித்தார். அண்ணாமலையின் நடைபயணத்தால் பாஜகவின் வாக்கு வங்கி மூன்று சதவீதத்தில் இருந்து இரட்டிப்பாகி ஆறு சதவீதமாக உயர்ந்து விட்டதாகவே கற்பனை செய்து கொண்டாலும், அதோடு மோடி பிரதமராக வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்களின் ஆதரவால் அது ஏழு சதவீதமே ஆகி விட்டாலும், அந்த ஏழு சதவீதத்தோடு பாஜக சேர்த்து வைத்திருக்கும் வாசன், ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் உள்ளிட்ட தனிமனித ஆட்களின் சேர்க்கையால் அது எட்டு சதவீதத்தையே தொட்டு விட்டாலும், அதனால் என்ன பிரயோஜனம்?

அண்ணா திமுகவின் பெரும்பகுதி வாக்குகளை தன் வசப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஓபிஎஸ்ஸை முன்வைத்து களமாடினால் மட்டுமே சுமார் முப்பது சதவீத அதிமுக வாக்குகளில் இருந்து சுமார் இருபது சதவீத வாக்குகளையாவது தங்களை நோக்கி தாமரை கட்சியால் ஈர்க்க முடியும் என்பதே கள யதார்த்தம்.

பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்: இதனுடன் டி.டி.வி. தினகரனின் அமமுகவும் அணிசேரும்போது மட்டும் தான் அது குறிப்பிட்ட தொகுதிகளின் வெற்றியை சாத்தியமாக்க முடியும் என்பதே உண்மை. பல தொகுதிகளின் வெற்றியை பாஜக பக்கம் திருப்ப வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு ஓபிஎஸ்சை பிரதானப்படுத்தி அவர் விரும்புகிற தொண்டர்களின் உரிமையை மீட்டுக் கொடுப்பதன் மூலம் மட்டுமே அதிமுகவின் பெரும்பகுதி வாக்குகளை அக்கூட்டணியால் அறுவடை செய்து பயனடைய முடியும் என்பதே நிஜம்.

மாறாக பாஜக தன்னை பூதாகர கணக்குப் போட்டுக் கொண்டு கற்பனை கணக்கோடு அரசியல் விற்பனைக்கு முயன்றால் அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியத்தையே தேர்தல் முடிவுகள் நிச்சயம் தரும் என்று கூறியுள்ளார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மருது அழகுராஜின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.

பண்ருட்டி காதில் கிசுகிசுத்த ஓபிஎஸ்: இந்நிலையில், நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் காதில் இந்த விஷயத்தை மெதுவாகச் சொன்னார். மருது அழகுராஜ் பேசிய விஷயம் பற்றி பொதுவாகச் சொல்லிவிடுங்கள் என்று காதில் கிசுகிசுப்பாகக் கூறினார் ஓபிஎஸ்.

O Panneerselvam and Panruti Ramachandran clears about marudhu alaguraj statement on bjp

இதையடுத்து அதுகுறித்துப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "முக்கியமான ஒரு தகவல். எங்கள் இயக்கத்தின் சார்பில் வெளியிடும் அறிவிப்புகள் கழக ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்துடன் வருபவைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள். எங்களில் யாராவது ஒருவர் எந்தவொரு அறிவிப்பு வெளியிட்டாலும் அது அவர்களது சொந்தக் கருத்து தான். மருது அழகுராஜ் கூறியுள்ள கருத்துக்கும் ஓபிஎஸ் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. அது அவரது சொந்தக் கருத்து" எனத் தெரிவித்தார்.

ஜகா வாங்கிய ஓபிஎஸ்: மருது அழகுராஜ், ஓபிஎஸ் அணிக்காக தீவிரமாக களமாடி வரும் நிலையில், மருது அழகுராஜின் கருத்து அவரது சொந்தக் கருத்து, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஓபிஎஸ் ஜகா வாங்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஓபிஎஸ் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மருது அழகுராஜ் பங்கேற்பாரா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+