"நாங்கல்லாம் அப்பவே அப்படி.." பல காளைகளை அடக்கியிருக்கேன்.. அமைச்சருக்கு ஓபிஎஸ் அதிரடி பதில்
சென்னை: இளம் காளையாக இருந்தபோது பல காளைகளை தாம் அடக்கியிருப்பதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நாயகர் என அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம், இதுவரை எத்தனை காளைகளை அடக்கியிருக்கிறார் என செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சட்டசபையில் வினவினார்.
அவருக்கு பதிலளித்து பேசுகையில் மேற்கண்ட இந்த தகவலை வெளியிட்டார் ஓ.பி.எஸ்.

சட்டசபை
தமிழக சட்டசபையில் கைத்தறித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. முன்னதாக காலையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது ஒரு சில ருசிகர நிகழ்வுகளும் சட்டசபையில் நடந்தன. அந்தவகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேசும் போது ஜல்லிக்கட்டு நாயகர் என ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு தடை
மேலும் தமிழகத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது என்பது குறித்தும் சூடான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், செய்தித்துறை அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், ஜல்லிக்கட்டு நாயகர் என அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம், இதுவரை எத்தனை காளைகளை அடக்கியிருக்கிறார் என வினவினார்.

அமைச்சருக்கு பதில்
அமைச்சர் சாமிநாதனுக்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இளம் காளையாக இருந்தபோது பல காளைகளை தாம் அடக்கியிருப்பதாக தெரிவித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. மேலும், மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் வகையில் காளைகள் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில்
அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு 'ஜல் ஜல் ஜல்' என ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இதனிடையே காங்கிரஸ் ஆட்சிக்காலம் குறித்து ஒபிஎஸ் பேசிய கருத்துக்கு அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் ஆட்சேபனை தெரிவித்து எதிர்ப்பை பதிவு செய்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications