சாமிதாங்க கும்பிட்டேன்.. யாகமெல்லாம் நடத்தலை... ஓ.பன்னீர் செல்வம் அதிரடி விளக்கம்
யாகம் நடத்தியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: "நான் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் செய்யவில்லை"என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறையில் நேற்று அதிகாலை யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.

இந்த யாகத்தை செய்ய நேற்று முன்தினமே அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. துணை முதல்வரின் அறை புதுப்பிக்கப்பட்டுள்ளதால் தான் யாகம் நடத்தப்பட்டது என்று ஒரு பக்கம் காரணம் கூறப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினோ, இந்த யாகம் எதற்கு? முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வதற்காகவா? என்று கேள்வி கேட்டிருந்தார்.
இந்நிலையில், "நான் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் செய்யவில்லை" என்று ஓபிஎஸ் யாகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: "தலைமை செயலகத்தில் என்னுடைய அறையில் நான் சாமி கும்பிட்டேன். அவ்வளவுதான். வழக்கம்போலத்தான் சாமி கும்பிட்டேன். யாகமெல்லாம் நடத்தவில்லை. என்னுடைய அலுவலக அறையின் ஜன்னல் கதவு அரித்திருந்தது. இதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன.
பொதுவாக இப்படி செப்பனிடும் பணிகள் நடைபெற்றால், அதற்கு என்ன பூஜைகள் செய்யப்படுமோஅதைதான் நான் செய்தேன். முதல்வராக வேண்டும் என்றுதான் யாகம் நடத்தினேன் என்று ஸ்டாலின் சொல்லுகிறார். அப்படியென்றால் நான் மட்டும்தானா யாகம் நடத்துவேன்? எல்லோரும்தான் யாகம் நடத்துவார்களே? யாகம் நடத்தினால், முதல்வராகிவிடலாம் என்று ஸ்டாலின் நம்புகிறாரா?" என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications