மத்திய அரசின் தடைகளை தாண்டி.. OBC இடஒதுக்கீடு கிடைக்க திமுக காரணம்: எம்பி வில்சன் EXCLUSIVE பேட்டி
சென்னை: பெரும் எதிர்பார்ப்பிற்கும்.. சட்ட போராட்டத்திற்கும் பின் மருத்துவ படிப்புகளில் அகில் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திமுக எம்பி வழக்கறிஞர் வில்சன் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியின் இடைவிடாத சட்ட போராட்டம் காரணமாக இந்த இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி மொத்த தேசத்திற்கும் புத்தாண்டு பரிசாக இந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமைந்து இருக்கிறது.
திமுக சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த சட்ட போராட்டம் தேசிய அளவில் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த வழக்கிற்கு பின் இருந்த.. 2019ல் இருந்து இதற்காக குரல் கொடுத்து வந்த திமுக எம்பி வில்சனிடம் ஒன்இந்தியா தமிழ் சார்பாக பேசினோம். இந்த சட்ட போராட்டம் சாத்தியமானது எப்படி என்று அவரிடம் விவாதித்தோம்.

எம்பி வில்சன் பேட்டி
2019 ஜூலை மாதம் ஓபிசி மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம் பற்றி பேசினீர்கள்.. கிட்டத்தட்ட இரண்டரை வருடமாக போராடி இப்போது இந்த ஓபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளீர்கள். இந்த நீண்ட சட்ட போராட்டத்தை எப்படி பாருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்பி வில்சன்,
இந்த இந்திய தேசத்தில் அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சம நீதி வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.. அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் புத்தகத்தில், சட்டத்தில் இதெல்லாம் இருந்தாலும்.. மக்கள் மனசில் இன்னும் சமத்துவம் பிறக்கவில்லை.

சமத்துவம் சமூக நீதி
மக்கள் மனதில் இன்னும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. இதை எதிர்த்து மக்கள் கிட்ட சமத்துவத்துத்தை கொண்டு வர ஒவ்வொரு முறையும் போராட வேண்டியதா இருக்கு. 1980களில் மண்டல் கமிஷன் ரிப்போர்ட் வந்தாலும் கூட அதை அமலாக்க 10 வருடம் எடுத்துக்கிட்டாங்க. வேலை வாய்ப்பில் அதை கொண்டு வர 10 வருஷத்துக்கு மேல் ஆனது. மண்டல் கமிஷனை அமல்படுத்த வேண்டும் என்பதற்காகவே நீண்ட நெடிய சட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.
கல்வியில் இதே மண்டல் கமிஷன் பரிந்துரையை செய்ய சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. இப்படி இருக்க 2006ல் கல்வியில் ஓபிசி ரிஸர்வேஷன் கொண்ட வர சட்டம் இயற்றினார்கள். ஆனால் அதை எதிர்த்து கேஸ் போட்டனர். சட்ட போராட்டம் முடிந்து 2008ல் கடைசியாக கல்வியில் ஓபிசி ரிஸர்வேஷனுக்கு அனுமதி கிடைத்தது. 2008லேயே ஓபிசி இடஒதுக்கீடு சட்டம் வந்தும் கூட அதை மருத்துவத்தில் அமல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்திக்கொண்டே வந்தது.

திமுக மண்டல் கமிஷன்
மருத்துவ துறையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. இத்தனை வருடம் மனதளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறிவிட கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே அநீதி இழைப்பார்கள்? இந்தியா வல்லரசு ஆகணும்னு சொல்றாங்க... எல்லோரும் முன்னேறினாதானே இந்தியா வல்லரசு ஆகும்? ஒரு பிரிவு மக்கள் மட்டும் முன்னேறினா எப்படி இந்தியா வல்லரசு ஆகும்.
எத்தனை நாளுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் கீழேயே இருக்கணும்? அவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்க கூடாதா? அவர்கள் எல்லாம் உயர்படிப்பு படிக்க கூடாதா? சமூக நீதிதான் எல்லோருக்கும் சமத்துவத்தை கொடுக்கும். பல காலமாக அவர்களை ஒடுக்கி வச்சி இருக்கீங்களே.. அவர்களை வெளியவே வச்சு இருக்கீங்களே.. எப்ப அவங்களை உள்ளே விடுவீங்க. பல வருஷமா.. பல தலைமுறையா அவர்களுக்கு அநீதி இழைத்து உள்ளனர். சமூக நீதி என்பது கீழ் மட்டத்தில் இருப்பவர்களை மேலே கொண்டு வருவது.. அதுதான் எங்கள் கொள்கை.
இதை நாங்கள் வாய் அளவில் மட்டும் பேச மட்டோம். செயல் அளவில் செய்து காட்டி வருகிறோம். மத்திய அரசில் பல இடங்களில் முன்னேறிய வகுப்பினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மற்றவர்கள் மேலே வர கூடாது என்று பார்க்கிறாங்க. அதை இப்போது திமுகவின் சட்டம் போராட்டம் உடைத்து உள்ளது.

சட்டம் போராட்டம் திமுக
இந்த போராட்டத்தை எப்படி தொடங்கினீர்கள்.. எப்படி இதை பற்றி பேசணும்னு தோணுச்சு? என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்பி வில்சன்,
நான் சீனியர் வழக்கறிஞர். எம்பியாக மாநிலங்களவை போகிறேன். முதல்வர் ஸ்டாலின்தான் மாநிலங்களவைக்கு அனுப்பினார். அவர் அனுப்பும் போதே.. போய் சமூக நீதிக்காக குரல் கொடுங்கள் என்று கூறினார். என்னிடம் சமூக நீதி பற்றி பேசும்படி கூறினார். 2019 ஜூலை 26ம் தேதி நான் அவையில் பேசிய முதல் பேச்சே ஓபிசி இடஒதுக்கீடு பற்றியதுதான்.
ஓபிசி ரிசர்வேஷன் பற்றி பேசும்படி என்னிடம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். நான் பேசியதை கேட்டு என்னை தலைவர் பாராட்டினார். இந்த விஷயத்தை அப்படியே விடவேண்டாம்.. முன்னெடுத்து கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். அதை தொடர்ந்து திமுக எம்பிக்கள் மற்ற சகோதர கட்சி எம்பிக்கள் இதே கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்தினார்கள்.

முதல்வர்தான் பேச சொன்னார்
நாங்கள் பல முறை இதற்காக அவையில் பேசினோம். பல முறை பேசியும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்தே சட்ட போராட்டத்தை கையில் எடுத்தோம். முதலில் உச்ச நீதிமன்றம் சென்று பின் அவர்களின் அறிவுறுத்தலில் சென்னை உயர் நீதிமன்றம் சென்றோம். எங்களுடன் சகோதர கட்சிகளும் வழக்கு தொடுத்தன. அங்கு வழக்கிலும் வெற்றிபெற்றோம். ஆனால் இதை ஒன்றிய அரசு அமல்படுத்தவில்லை.
இதையடுத்து ஒன்றிய அரசுக்கு எதிராக தனியாக திமுக சார்பாக அவமதிப்பு வழக்கு தொடுத்தோம். அந்த வழக்குதான் திருப்பு முனையை ஏற்படுத்தியது. எங்கள் மனுவை எதிர்த்து இரண்டு மருத்துவர்களும் வழக்கு தொடுத்து இருந்தனர். நாங்கள் தொடுத்து சட்ட போராட்டம் நடத்தினோம். மெரிட் மூலம்தான் மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர் தரப்பில் வாதம் வைத்தனர். நாங்கள் மெரிட் என்பதே சமூக நீதியை மறைக்கும் முகமூடி என்று வாதம் வைத்தோம். இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல.. அது அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டோம்.

பாஜகவின் வெற்றியா இது?
இந்த தீர்ப்பை பாஜகவிற்கு கிடைத்த வெற்றி, பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என்கிறார்களே? என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்பி வில்சன்,
நான்தான் இதை பற்றி பாராளுமன்றத்தில் முதலில் பேசினேன். அப்போதே இதை பிரதமர் மோடியும் பாஜகவும் நிறைவேற்றி இருக்கலாமே? அப்போது மோடி கொடுத்தாரா? அப்போது ஒன்றிய அரசு இந்த இடஒதுக்கீட்டை கொடுத்ததா? சென்னை உயர் நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வாதம் வைத்தது யார்? இந்த வழக்கை வேறு வழக்கோடு சேர்ந்து விசாரிக்க வேண்டும் என்று கூறி சென்னை ஹைகோர்ட்டில் கூட காலம் தாழ்த்தினார்கள்.
மீண்டும் இதற்காக நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்று முறையிட்டோம். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இதில் உத்தரவு போட பவர் கிடையாது.. அனைத்து இந்திய அட்மிஷனில் ரிசர்வேஷன் தர முடியாது என்றெல்லாம் வாதம் வைத்தார்கள். ஆனால் நாங்கள் சட்ட போராட்டம் நடத்தினோம். பிரதமர் மோடி நடத்தினாரா? இதற்காக பல வழக்குகளை அவர்கள் ஆதாரமாக காட்டினார்கள்.. நாங்களும் பல வழக்குகளை எங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டினோம். .
கடைசியில் சென்னை உயர் நீதிமன்றம் ரிசர்வேஷன் கொடுக்க சொல்லியும் யூனியன் அரசு கொடுக்கவில்லை. நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடுத்த பின்புதான் இப்போது ரிசர்வேஷன் தர ஒப்புக்கொண்டு உள்ளனர். இரண்டு டாக்டர்களை தூண்டிவிட்டு வழக்கு போட சொன்னது யார்? இவ்வளவு பண்ணிவிட்டு இப்போது இந்த வெற்றிக்கு எப்படி யூனியன் பாஜக அரசு உரையை கொண்டாட முடியும்? .. நாங்கள் இவ்வளவு காலம் போராடினோம்..
இதற்கு எப்படி ஒன்றிய அரசு உரிமை கொண்டாட முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications