Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேங்க் பாஸ்புக் + ஆதார்.. வேளாண் கருவிகளை "இ-வாடகை"யில் அப்ளை பண்ணுவது எப்படி? "இந்த" ஆவணங்கள் ரெடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளாண் இயந்திரங்களுக்கு அரசு தரப்பில் மானியம் வழங்கப்படுகிறது.. இந்த மானியத்தை பெற விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா?

தமிழகத்தை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Online e vaadagai and and Do you know How to apply and get TN Government Agri Machineries for rent

குறிப்பாக, விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடி பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்காக முனைப்பு காட்டி வருகிறது என்றாலும், ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது.

ஏனவேதான், வேளாண்மை பொறியியல் துறை மூலம் மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர், மினி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற 697 நில மேம்பாட்டு இயந்திரங்களும், சுழல் விசைத்துளை கருவி, பெர்குஷன் கருவி, சிறு விசைத்துளைக் கருவி போன்ற 101 சிறுபாசனத் திட்டக் கருவிகளும் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

காய்கறிகள்: இதைத்தவிர, உளிக்கலப்பை, ரோட்டவேட்டர், கொத்துக் கலப்பை, நிலம் சமன் செய்யும் கருவி, விதை விதைக்கும் கருவி, வரப்பு செதுக்கி சேறு பூசும் கருவி, கரும்பு மற்றும் காய்கறி நாற்று நடவு செய்யும் கருவி, களையெடுக்கும் கருவி, பல்வகை பயிர் கதிரடிக்கும் இயந்திரம் போன்ற 40 வகையான 1,885 டிராக்டரால் இயங்கக்கூடிய வேளாண் கருவிகள் டிராக்டருடன் அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.. இதன்மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட உள்ளன.

ஆவணங்கள் என்னென்ன: இந்த மானியம் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? ஆன்லைன் மூலமாக எப்படி விண்ணப்பம் அளிக்க வேண்டும் தெரியுமா? இந்த மானியம் பெற விரும்பும் விவசாயிகள், 'உழவன் செயலியில்' இ-வாடகை சேவை மூலம் அல்லது evaadagai என்ற வெப்சைட் மூலமாகவே, தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை முன் பதிவு செய்து வாடகைத் தொகையை செலுத்த வேண்டும்..

இந்த செயலியில் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் மற்றும் விவரங்களையும் அப்லோடு செய்து, அதற்கு பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.. இதற்கு, நிலத்தின் சிட்டா, புல வரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், ஆதார் அட்டையின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல் போன்ற ஆவணங்களை, சமர்ப்பிக்க வேண்டும்.

கள ஆய்வு செய்யும் வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலர்கள், இதனை சரிபார்ப்பார்கள்.. பிறகு, அதிக மதிப்புள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம் பதிவு செய்து, மானியத்தை பெற்றுக் கொள்ளலாம்.

எதற்கெல்லாம் மானியம் இந்த திட்டத்தின்மூலம், இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பித்தால், நிலமேம்பாடு, உழவு, விதைப்பு, அறுவடை, பண்ணைக் கழிவு மேலாண்மை போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கெனவே, அரசு 2 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.. இதன்மூலம் 40 லட்சம் ரூபாய் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாம்.

செயல்பாடு எப்படி: இ - வாடகை செயலியை பயன்படுத்தி, இயந்திரங்களை வாடகைக்கு பெற்று, பணிகள் நிறைவடைந்த பிறகு, விவசாயி செலுத்திய மொத்த வாடகைத் தொகையில், 50 சதவீதத் தொகை, பின்னேற்பு மானியமாக, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஒரு விவசாயிக்கு 5 மணி நேரம் அல்லது ஐந்து ஏக்கர் ஆகியவற்றுக்கான வாடகையில், எது குறைவோ, அந்த வாடகை மானியமாக வழங்கப்படும்.

அதிகபட்சம் எவ்வளவு: நன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு 625 ரூபாய் வரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும். புன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கு 1,250 ரூபாய் வரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மானியம் வழங்கப்படும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+