Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேற லெவல் யோசனை.. நாட்டிலேயே முதல்முறையாக.. தமிழ்நாடு மாணவர்களுக்கு என்று.. வெளியான மாஸ் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும் இருப்பில் வைப்பதும் வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கென இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உள்ள பாடங்களை 17,000 கருப்பொருள்களாக வகுப்புகள் வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.

Online Video Glass for the first time in India: Tamil Nadu Education Minister Anbil Maheshs important order for schools

நாட்டிலேயே முதன் முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள இத்தகைய செயலி இதுவே. இச்செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் இணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம்.

இந்த முன்னெடுப்பின் மூலம் 25 வட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறி உள்ளது. 17,000 கருப்பொருள்களாக சிறு சிறு வீடியோக்களாக இதை பிரித்து உள்ளனர். அதை வைத்து வீடியோக்களை உருவாக்கி உள்ளனர்.

மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் இந்த வீடியோவை பார்த்தாலே போதும் அவர்கள் எளிதாக பாடம் கற்க முடியும். மாணவர்களுக்கு வீடியோவிலேயே விளக்கங்கள் இருக்கும். இது போன்ற வீடியோக்களை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.

ஆனால் அந்த வீடியோக்களை பார்க்க பல லட்சம் ரூபாய் தேவைப்படும். பல லட்சம் பீஸ் கட்டி அந்த வீடியோக்கள் பார்க்க சேர வேண்டும். ஆனால் அதை இலவசமாக தமிழ்நாடு அரசு வீட்டிலேயே இருந்து பார்க்கும் விதமாக அரசு உருவாக்கி உள்ளது.

இதனால் மாணவர்கள் யாரும் பாடத்திட்டங்களை மிஸ் செய்ய முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் மாணவர்கள் பெற்றோர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முக்கிய அறிவிப்பு: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை எல்லாம் முடிந்து பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலாண்டு தேர்வுகளுக்கான பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் காலாண்டு தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பள்ளிகள் தொடக்க நாட்களில் 2 வாரம் தாமதமாக தொடங்கப்பட்டது. கடும் வெயில் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.

அதன்பின் பள்ளிகள் தொடங்கியும் கூட மழை காரணமாக முதல் சில நாட்கள் பள்ளிகள் நடத்தப்படுவதில்லை சிக்கல் இருந்தது. அதை ஈடு கட்ட தற்போது சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுக்க சனிக்கிழமைகளில் அடிக்கடி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காலாண்டிற்கு முன் அதற்கான பாடத்திட்டங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் முக்கியமான உத்தரவு ஒன்றை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு சிலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் இது தெரிய வந்துள்ளது. இளம் வயதிலேயே சிலருக்கு நீரிழிவு நோய்கள் ஏற்பட்டு உள்ளன.

இப்போதெல்லாம் நீரிழிவு நோய்கள் என்பது பெற்றோரிடம் இருந்து நேரடியாக குழந்தைகளுக்கும் வருகிறது. ஜீன் ரீதியாக பலருக்கு நீரிழிவு நோய்கள் ஏற்படுகின்றன. அதேபோல்தான் இவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் நீரிழிவு நோய்கள் உள்ள மாணவ, மாணவியர், அதற்கு ஏற்ப வகுப்புகளில் உணவு உட்கொள்ள, மருந்து எடுக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் முன்கூட்டியே நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும் என்றால் அதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் நடக்கும் நாட்களிலும் இதேபோல் தேர்வு அறைக்கு உணவு எடுத்து செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். மருந்துகள், பழங்கள், தண்ணீர் கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு நேரங்களில் அவர்கள் மயக்கம் அடைய கூடாது,. ரத்த சர்க்கரை அளவு மாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக சிறிய அளவிலான ரத்த சர்க்கரை அளவு சோதனை மானிகளை கொண்டு வர மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாணவர்கள் இடையே இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+