காரைக்குடி, திருப்பரங்குன்றத்தில் கடும் போட்டி.. திமுகவை விடாமல் விரட்டும் அதிமுக! நக்கீரன் சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி வாரியாக சர்வே விவரங்களை நக்கீரன் வெளியிட்டுள்ளது. இதில் காரைக்குடி, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் சரிசமமான வாக்கு சதவீதம் பெறும் என்று கணித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளையுடன் பிரசாரம் முடிகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் முறையாக இந்த தேர்தலில் களம் கண்டுள்ளதால், என்ன மாதிரியான தாக்கம் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தேசிய அளவில் ஏற்பட்டுள்ளது.

Opinion poll Tight Contest Predicted Between DMK and AIADMK in Key Constituencies Nakkheeran Survey

விஜய்யின் அரசியல் வருகையால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிமுக - பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. ஆளும் திமுக ஆட்சியை தக்க வைக்கவும், அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், பல்வேறு கருத்துகணிப்புகளும் வெளியாகி வருகின்றன.

காரைக்குடியில் யாருக்கு வெற்றி?

இதில் பெரும்பாலான கருத்துகணிப்புகள் திமுக கூட்டணிக்கே சாதகமாக உள்ளன. இந்த நிலையில், நக்கீரன் நாளிதழ் நடத்திய சர்வே வெளியாகியுள்ளது. தொகுதி வாரியாக சர்வே விவரங்களை நக்கீரன் வெளியிட்டுள்ளது. இதில் காரைக்குடி, திருப்பரங்குன்றன்றம், கன்னியாகுமரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காரைக்குடி தொகுதியில் திமுகவும் அதிமுகவும் தலா 33 சதவீத வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான் போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. சீமான் கட்சி தமிழகத்திலேயே இந்த தொகுதியில்தான் அதிக வாக்கு சதவீதம் அதாவது 18 சதவீதம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் தேர்பொகி பாண்டி, தவெக சர்பில் டாக்டர் பிரபு போட்டியிடுகிறர்கள்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் யாருக்கு வெற்றி?

* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியும் இதில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தால் இந்த தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ள ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுகா தலா 43 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பாக கிருத்திகா தங்கபாண்டியன், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா, நாம் தமிழர் கட்சி சார்பாக சத்யா தேவி, தவெக சார்பாக சிடிஆர் நிர்மல் குமார் போட்டியிடுகிறார்கள்.

* காங்கிரஸ் மற்றும் பாஜக வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரி உள்ளது. இந்த தொகுதியிலும் திமுகவும் அதிமுக சரிசமமான வாக்கு சதவீதம் பெறும் என்று நக்கீரன் சர்வேயில் தெரிவித்துள்ளது. இதனால், எந்த கட்சிக்கு வெற்றி என்பது யூகிக்க முடியாத நிலை உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பாக மகேஷ், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், நாம் தமிழர் கட்சி சார்பில் மரியா ஜெனிஃபர், தவெக சார்பில் எஸ்.ஆர் மாதவன் போட்டியிடுகிறார்கள்.

நன்னிலம் தொகுதி

* நன்னிலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் முன்னாள் அமைச்சர் காமராஜ், திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக முகம்மது முபாரக், தவெக சார்பாக பிரபாகரன், நாம் தமிழர் கட்சி சார்பாக தேன்மொழி திலீப் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியிலும் அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுமே 43 சதவீதம் வாக்குகள் வாங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+