திமுகவை எதிர்ப்பது.. சனாதன சக்திகளுக்கு துணைபோகும் அரசியல்.. "நங்குன்னு" சொன்ன திருமா.. சீமானுக்கா?
பெரியாரியத்தை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல. சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியம் என்று திருமா கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் நடைபெற்ற பிபிசி ஆவணப்பட விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் திமுகவை எதிர்ப்பது ஏன் தவறு என்பது தொடர்பாக பேசினார்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதே அளவில் மக்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியது.
இந்நிலையில், இந்த கலவரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரிட்டிஷ் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.

அறிக்கை
இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி செய்தி ஊடகம் சமீபத்தில் 'India: The Modi Question' எனும் ஆவணப்படத்தை இயக்கியது. இந்த ஆவணப்படத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்தாக மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு இந்த ஆவணப்படம் தற்போது நாடு முழுக்க தடை செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இந்திய தொலைக்காட்சிகளில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்படவில்லை.

விசிக
இதை பல்வேறு அமைப்புகள் நாடு முழுக்க தடையை மீறி திரையிட்டு வருகின்றன. சிபிஎம், சிபிஐ கட்சிகள், எஸ்எப்ஐ அமைப்புகள் இந்த படத்தை நாடு முழுக்க திரையிட்டு வருகிறது. இதையடுத்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். நேற்று சென்னை அம்பேத்கர் திடலில் "இந்தியா: மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் பிபிசி ஆவணப்படத்தை திருமாவளவன் தமிழில் வெளியிட்டார். இதில் பல அரசியல் தலைவர்கள், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற பிபிசி ஆவணப்பட விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் இந்த ஆவணப்படம் குறித்து பேசினார். மேலும் தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்க கூடாது, திமுகவை எதிர்ப்பது ஏன் தவறு என்பது தொடர்பாகவும் அவர் பேசினார்.

என்ன சொன்னார்?
அவர் தனது பேச்சில், தமிழ் தேசியம் என்பது சனாதனத்தை எதிர்க்க வேண்டும். குஜராத்தில் நடந்த கலவரத்தை பற்றி தமிழ் தேசியமும் பேச வேண்டும். மத வாதமே அவர்களின் முக்கிய எதிர்ப்பாக இருக்க வேண்டும். அவர்களின் முக்கிய குறிக்கோள், கொள்கை அதுவாகவே இருக்க வேண்டும். ஆனால் திமுகவை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் மண்ணிலேயே திசை திருப்பும், திருப்புவாதத்தை எதிர்க்க வேண்டும். பெரியாரியத்தை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல. சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியம். இந்துத்துவா கொள்கையை இவர்கள் எதிர்க்க வேண்டும்.

திரிபுவாதம்
ஆனால் அதை விடுத்து இவர்கள் திரிபுவாதம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக, திகவை எதிர்ப்பதன் மூலம் இவர்கள் சனாதன அரசியலுக்கு துணை சென்று கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான அரசியல். திமுகவை எதிர்ப்பது சனாதன சக்திகளுக்கு துணைபோக கூடிய அரசியல். அதை இவர்கள் கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சீமானின் நாம் தமிழர் கட்சி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து, தமிழ் தேசிய அரசியல் பேசி வரும் நிலையில்தான் திருமாவளவன் இந்த விமர்சனத்தை வைத்து இருக்கிறார்.
-
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
"ப்ளீஸ் திருமா".. ஸ்டாலினின் அந்த வார்த்தை! மா.கம்யூனிஸ்ட்டால் விசிகவிற்கு விழும் அடி.. திமுக ‘செக்’ -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications