விஸ்வரூபம் எடுக்கும் ஒற்றைத் தலைமை.. சசிகலாவை டிரம்கார்டாக பயன்படுத்துகிறாரா ஓபிஎஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்றால் அது சசிகலா நியமனத்தின் போது பொருந்தாது ஏன் என்ற கேள்விக்கு ஓபிஎஸ் மழுப்பலான பதிலையே கொடுத்தார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனும் பிரச்சினை கடந்த 5 நாட்களாக வெளிப்படையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியே தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் ஓபிஎஸ் மவுனத்தை கலைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒற்றை தலைமை என்பது தற்போது தேவையில்லாத ஒன்று. இதை நானோ எடப்பாடி பழனிச்சாமியோ விரும்பவில்லை.

 பிரச்சினை

பிரச்சினை

ஆனால் சிலர் வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்ட நிலையில் தற்போது புதிதாக பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

இரட்டை தலைமை

இரட்டை தலைமை

எனவே அதிமுகவுக்கு இரட்டை தலைமையே சரி என 20 நிமிடங்கள் அளித்த பேட்டியில் பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டார். அப்போது சசிகலா குறித்தும் ஓபிஎஸ் பேசியிருந்தார். அவர் கூறுகையில் சசிகலாவை நாங்கள் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் தேர்வு செய்தோம். அவ்வளவுதான் என்றார்.

நிரந்தர பொதுச் செயலாளர்

நிரந்தர பொதுச் செயலாளர்

எடப்பாடி பழனிச்சாமி மவுனமாக இருந்து வரும் நிலையில் ஓபிஎஸ்ஸோ பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா, புதிய பதவி உருவாக்கினால் அது அவருக்கு செய்யும் துரோகம் என்கிறீர்களே சசிகலாவை தேர்வு செய்யும் போது அது தெரியவில்லையா என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அதற்கு ஓபிஎஸ், நேரடியாக எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் சிக்கலை ஏற்படுத்தும் கேள்விகளையே தொடர்ந்து கேட்கிறீர்களே என கூறி மழுப்பினார். தொடர்ந்து சசிகலா குறித்த கேள்விகளுக்கு அவர் எந்த பேட்டியிலுமே நேரடியாக பதிலளிப்பது இல்லை. மற்ற தலைவர்களை போல் சசிகலாவை அவர் விமர்சிப்பது இல்லை. செய்தியாளர்களின் கேள்விக்கு கூட நழுவுகிறார்.

ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

தொடர்ந்து ஒற்றை தலைமை பிரச்சினையை ஏற்படுத்தி தன்னை ஓரங்கட்ட நினைத்தால் சசிகலாவை நேரில் போய் சந்திப்பேன் என எடப்பாடி தரப்புக்கு ஓபிஎஸ் மிரட்டல் விடுத்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. சசிகலா உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை பிரச்சினையை கையிலெடுக்கிறார்கள்.

 டிரம்கார்டு சசிகலா

டிரம்கார்டு சசிகலா

மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு தனக்கு இல்லை என தெரிந்து கொண்ட ஓபிஎஸ், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சசிகலாவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்த போது ஓபிஎஸ் தற்போது கூறியது போல் தற்காலிக என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை என்றுதான் கே சி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூறுகிறார்கள். அப்படியிருக்க, சசிகலாவை ஓபிஎஸ் டிரம்கார்டாக (துருப்பு சீட்டு) பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+