30,000 ஊழியர்களை பணி நீக்கும் 'ஆரக்கிள்'! சிக்கலில் இந்தியர்கள்.. IT கதை முடியப்போகுது!
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த ஐடி நிறுவனம்தான் ஆரக்கிள். இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, பெங்களூர் என இந்தியாவின் பல நகரங்களில் இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தமாக 30,000 ஊழியர்களை நீக்க உள்ளதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனால் இந்திய பணியாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 18-20% பேர் இந்தியர்கள். அதாவது 28,000-30,000 ஊழியர்கள் வரை இந்தியர்கள் ஆவார்கள். இப்படி இருக்கையில், பணி நீக்கம் குறித்த அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பணி நீக்கம் ஏன்?
கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் OpenAI உடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. புலியை பார்த்து பூனையும் சூடு போட்ட கதையாக, ஆரக்கிள் நிறுவனமும் OpenAIல் முதலீடு செய்தது. எல்லாம் ஓகேதான்.. ஆனால், முதலீடு செய்த தொகைதான் ரொம்பவும் அதிகம். அதாவது ரூ.25 லட்சம் கோடி அளவில் முதலீடு செய்திருந்தது. இதனால் நிதி நெருக்கடியில் இந்நிறுவனம் சிக்கிக்கொண்டது. எனவே வேறு வழியின்றி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவெடுத்திருக்கிறது.
கடன் சுமை
நிதி மேலாண்மையைச் சரிசெய்யவும், AI உள்கட்டமைப்புக்கான நிதியைத் திரட்டவும், 20,000-30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதனை TD cowen முதலீட்டு வங்கி தெரிவித்திருக்கிறது. இப்படி வேலையை விட்டு அனுப்புவதன் மூலம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலரை சேமிக்க முடியும்.
OpenAI உடன் ஒப்பந்தம்
சாம் ஆல்ட்மேனின் OpenAI நிறுவனத்திற்குத் தேவையான அதிவேக கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டா சென்டர்களை உருவாக்க ஆரக்கிள் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்து வருகிறது. சுமார் 30 லட்சம் உயர்தர GPU-களை வாங்கவும், மற்ற உள்கட்டமைப்புகளுக்காகவும் 156 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் டெக்சாஸ், விஸ்கான்சின் மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகிய இடங்களில் டேட்டா சென்டர்கள் அமைக்க 58 அமெரிக்க டாலர் கடன் வாங்கியிருக்கிறது. எனவே மொத்த கடன் 100 பில்லியனை தாண்டியிருக்கிறது.
இரண்டு மடங்கு வட்டி
கடன் அதிகரித்ததால், பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்புகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆரக்கிளின் இந்தத் திடீர் கடன் சுமை மற்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியைக் கண்டு அமெரிக்க வங்கிகள் கடன் வழங்கத் தயங்குகின்றன. வங்கிகள் இப்போது ஆரக்கிளுக்கு வழக்கத்தை விட இரண்டு மடங்கு வட்டி கேட்கின்றன.
இந்த நெருக்கடியின் பின்னணியில்தான் தற்போது நிறுவனம் தனது ஊழியர்களை வேலையை விட்டு தூக்க திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications