அடடா.. வெளிநாடுகளில் இருப்பது போல.. தமிழக பஸ்களில் "பேனிக் பட்டன்".. பெண்களை இனி சீண்ட முடியாது!
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகளில் இந்த பட்டன் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன பேனிக் பட்டன் என்று பார்க்கும் முன் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி பார்க்கலாம்.
சமீபத்தில் சென்னையில் இருந்து வேலூருக்கு பேருந்தில் சென்ற பெண் ஒருவர், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை தாக்கிய வீடியோ இணையம் முழுக்க வைரலானது. பின் சீட்டில் இருந்து கையைவிட்டு சீண்ட முயன்ற அந்த நபரை அந்த பெண் சேஃப்டி பின்னாள் குத்தி பதிலடி கொடுத்தார்.
மேலும்.. "பாருங்க.. பின்னால் இருந்து ஒரு கை வருகிறது.. அதுவே நான் ஹூக்கால் குத்தினால் கை வெளியே போய்விடுகிறது.." என்று பேருந்தில் நடந்த சம்பவத்தை அப்படியே வீடியோவாக எடுத்து வெளியே விட்டு இருந்தார்.

பெண் வீடியோ
அந்த பெண்ணின் இந்த செயல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் அந்த கொடூர நபரை கைதும் செய்தனர். சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. பெண்களை சீண்டுவது, உரசி உரசி தொல்லை செய்வது, பின் இருக்கையில் இருந்து கையை நீட்டுவது என்று தொடர்ந்து பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

பேருந்து
இதை தடுக்கும் விதமாக தற்போது தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகளில் இந்த பட்டன் அமலுக்கு வந்துள்ளது அதன்படி மொத்தம் 510 பேருந்துகளில் இந்த பட்டன் கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருக்கைகளுக்கு மேலே ஆங்காங்கே இந்த பட்டன்கள் இருக்கும். இது அபாய ஒலி எழுப்பும் பட்டன் ஆகும்.

பேனிக் பட்டன்
பேருந்துகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் உட்பட அனைத்து குற்றச்செயல்களையும் தடுக்கும் விதமாக இந்த பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது செயல்படும் விதமே ஆச்சரியமானது. பேருந்தில் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த பட்டனை அழுத்தினால் போதும். பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இருக்கும். உடனே இந்த தகவல் பல்லவன் சாலையில் உள்ள MTC தலைமையகத்திற்கு செல்லும்.

பேருந்து பேனிக் பட்டன்
இந்த பட்டன் உள்ள பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பட்டனை அழுத்தியதும், MTC தலைமையகத்தில் இருந்து அந்த குறிப்பிட்ட பேருந்தில் என்ன நடக்கிறது என்று அதிகாரிகள் சோதனை செய்வார்கள். அதோடு அருகில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் ரோந்து வாகனங்களுக்கும் உடனே இதன் மூலம் அவசர மெசேஜ் அனுப்பப்படும். சிசிடிவி - ஜிபிஎஸ் - பேனிக் பட்டன் என்ற மூன்று சிறந்த தொழில்நுட்பங்கள் இணைந்து இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி செயல்படும்
சென்னையில் மாநகராட்சி பஸ்களில் மொத்தம் 510 பஸ்களில் முதல் கட்டமாக இந்த வசதி கொண்டு வரப்பட்டு இருக்கிறது. நிர்பயா கார்ப்பஸ் நிதியிலிருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அதிகம் பயணிக்கும் ரூட்களை கண்டுபிடித்து அங்கே இந்த வசதியை அதிகம் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பேருந்துகளில் நடக்கும் அனைத்து விதமான குற்றச்செயல்களையும் எளிதாக கண்காணிக்க முடியும். உடனே நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications