அந்த பொண்ணோட அழகில் மயங்கினேன்! அதான் வாயை பொத்தி! சென்னை பரோட்டா மாஸ்டர் வாக்குமூலம்
சென்னை: சென்னை பெண் என்ஜினியரின் அழகில் மயங்கி அவரை பலாத்காரம் செய்ய வாயை பொத்தி தூக்கிச் சென்ற பரோட்டா மாஸ்டர் போலீஸாரிடம் சிக்கி, கழிப்பறை சென்ற போது வழுக்கி விழுந்து மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை பெருங்குடியில் ஐடி ஊழியரான கேரளாவை சேர்ந்த இளம்பெண் (24). இவர் நேற்று முன் தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணின் வாயை பொத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தார்.
பின்னர் அந்த இளைஞரின் கையை கடித்துவிட்டு தப்பிக்க முயற்சித்து அந்த பெண் சப்தம் போட்டார். இதையடுத்து அங்கு கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.
இதையடுத்து இளம்பெண்ணை மீட்ட இளைஞர்கள் போலீஸுக்கு தகவல் தந்தனர். இதையடுத்து தகவலறிந்த துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி சென்றவர் யார் என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர் பணியாற்றும் ஹோட்டலுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு போலீஸார் சென்ற நிலையில் அங்கு பதுங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த லோகேஷ்வரன் (24) என்பது தெரியவந்தது. விசாரணையில் போலீஸாரிடம் லோகேஷ்வரன் கூறுகையில், நான் வேலை செய்யும் ஓட்டலுக்கு அந்த பெண் சாப்பிட வருவார். அப்போது அவரது அழகில் மயங்கிய நான் அவருடன் ஜாலியாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இதனால் ஓட்டலுக்கு செல்லாமல் லீவு போட்டுவிட்டு மது குடித்தேன். பின்னர் அந்த பெண் இரவு தனியாக செல்வது நினைவுக்கு வந்தது. உடனே அங்கு சென்றேன். அப்போது பழைய மாமல்லபுரம் சாலையில் அவர் தனியாக நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்தேன்.
அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு அருகே அவர் சென்ற போது வாயை பொத்தி அருகில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றேன். ஆனால் அவர் கூச்சலிட்டதால் நான் சிக்கிக் கொண்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அவரை துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் லோகேஷ்வரன் கழிவறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்து இடது கையில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
