அட.. இது என்ன.. இவ்வளவு உக்கிரமா இருக்காங்களே.. கட்சிகளுக்கு வந்த புது தலைவலி!
சென்னை : இப்போது தான் ஒரு வழியாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என எல்லா பிரச்னையும் முடிந்து வேட்பாளர் பட்டியலை ஒவ்வொரு கட்சிகளாக வெளியிட்டு வருகின்றன. சில கட்சிகள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையிலேயே முடிவுக்கு வராமல் இருந்து வருகின்றன.
எல்லா பிரச்னைகளும் முடிந்தது இனி தேர்தல் வேலைகளை கவனிக்கலாம் என கட்சி தலைமைகள் நினைத்து வரும் நிலையில், அனைத்து கட்சிக்குள்ளும் புதிய பிரச்னை ஒன்று உருவாகி உள்ளது. இதனை எதிர்பார்க்காத கட்சி தலைமைகள் என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றன.

முடிந்தது கூட்டணி பேச்சு
கூட்டணி பேச்சுக்கள், தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக, நேற்று முழு வேட்பாளர் 2வது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. இதுவரை வெளியிடப்பட்ட பட்டியலின்படி அதிமுக 177 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. திமுக கூட்டணிக்குள்ளும் ஏறக்குறைய கூட்டணி முடிந்து விட்டதால் இன்று அல்லது நாளை திமுக.,வின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக முளைத்த பிரச்சனை
தங்கள் கட்சிக்கு செல்வாக்கான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர். இன்னும் சில இடங்களில் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொண்டர்கள் போராடி வருகின்றன. இந்த பிரச்சனை அதிமுக கூட்டணிக்கு மட்டுமல்ல மற்ற கட்சிகளுக்கும் இதே நிலை தான். வேட்பாளர் பட்டியல் வெளியிட படாவிட்டாலும் உத்தேச பட்டியல் விபரங்களை வைத்து, தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொண்டர்களை சமாளிப்பது எப்படி
கூட்டணி கட்சிகளை சமாளித்து தொகுதி பங்கீட்டை முடித்த கட்சிகள், இப்போது தங்கள் கட்சி தொண்டர்களின் எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என குழப்பத்தில் உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் தேர்தல் வெற்றியை அது பாதிக்குமே என்ற கவலையும் கட்சிகளுக்கு வந்துள்ளது. இதனால் தொண்டர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

வெளியேறும் மாஜிக்கள்
தொண்டர்கள் ஒரு புறம் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், தங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் முன்னாள் எம்எல்ஏ.,க்கள், நிர்வாகிகள் பலர் அதிமுக.,வில் இருந்து விலகி, மற்ற கட்சிகளில் இணைந்து வருகின்றனர். மாஜிக்கள் வேறு கட்சிகளுக்கு செல்வதால் அவர்களின் ஆதரவாளர்களும் மற்ற கட்சிகளுக்கு சென்று விடுவார்கள். இதனால் ஓட்டு சதவீதம் பாதிக்கப்படும் என்ற கலக்கமும் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications