பசுமைத் தாயகம் சார்பில் எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதித்த மக்களுக்கு நாளை மருத்துவ முகாம்
சென்னை: பசுமைத் தாயகம் சார்பில் சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில்
சிறப்பு மருத்துவ முகாம் வரும் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்படுகிறது.
மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மணலி உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் மணலி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளுக்குள் எண்ணெய் கசிவு கலந்த வெள்ள நீர் சென்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது போல் கடற்கரை, கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட நீராதாரங்களிலும் இந்த எண்ணெய் கசிவு கலந்துவிட்டது. மேலும் மெரினா கடற்கரையிலும் எண்ணெய் கசிவு கலந்துள்ளதால் அங்கு அலையில் விளையாடுவோருக்கு கால்களில் கருப்பு கருப்பாக எண்ணெய் கறை ஒட்டிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் எண்ணூர் மீனவ மக்களின் படகுகளும் சேதமடைந்துவிட்டது. இதனால் மீனவ மக்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் நிவாரணமும், பொதுமக்களுக்கு தலா ரூ 7500 ம் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க பசுமைத் தாயகம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வரும் செவ்வாய்க்கிழமை அதாவது நாளை காலை 9 மணி முதல் சென்னை மாநகராட்சி பள்ளி வளாகம் (நேரு நகர்), எல்லையம்மன் கோயில் அருகில், சிவன் படை குப்பம், எண்ணூர், சென்னை - 600057. (கமலம்மாள் நகர், நேரு நகர், இந்திரா நகர்)
இந்த முகாமை தொடங்கி வைப்பவர்: மருத்துவர் அன்புமணி இராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர், மேனாள் இந்திய சுகாதார அமைச்சர், ஆலோசகர், பசுமைத் தாயகம்.
பங்கேற்பு: மருத்துவர் சரத்ராஜ் ஜெயச்சந்திரன் MBBS, MD FIPM (ஐந்து ரூபாய் மருத்துவர், “மக்கள் மருத்துவர்” எஸ். ஜெயச்சந்திரன் அவர்களது மகன்) மற்றும் சிறப்பு மருத்துவர்கள் & மருத்துவக் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications