போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடப்பதை தடுக்க பதிவு முறையில் அதிரடி மாற்றங்கள்.. இன்று முதல்!
சென்னை : சென்னை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடப்பதை தடுக்க தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர எழுத்தர்களும், நிலத்தரகர்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, நில உரிமையாளர்கள், தாலுகா அலுவலகங்களுக்கு சென்று தாங்கள் விற்பனை செய்ய விரும்பும் சொத்துக்கள் குறித்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்க்கப்பட்ட பின் 30 நாட்களுக்குள் உரிய தகுதி இருந்தால் மட்டும் அந்த புலப்படம் (''பிரி மியூட்டேசன் ஸ்கெச்' ) தரப்படும். அப்படி பெறப்பட்ட புலப்பட சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற வேண்டும். இது தொடர்பாக நில அளவையாளர் உரிய விசாரணை நடத்தி, தற்காலிக உட்பிரிவு ஆவணங்களை இணைய வழி தொடர்புடைய சார்பதிவகத்துக்கு அனுப்பி வைப்பார்.

அதன்பின்னர் நில உரிமையாளர் தனது நிலப் பரிவர்த்தனையை சார்பதிவகத்தின் மூலம் மேற்கொள்ள முடியும். இதன் பின்னர் இணைய வழியிலான பட்டா மாறுதல் விவரங்கள் மீண்டும் புல தணிக்கை ஏதுமின்றி தொடர்புடைய ஆவணங்களில் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்திரப் பதிவுக்கு முன்பான உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறை. முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், சோழகிரி ஆகிய தாலுகாக்களிலும், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களிலும் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.
இதனிடையே அரசு வெளியிட்ட இன்னொரு அறிவிப்பின் படி. பத்திர எழுத்தர்கள் பத்திரங்கள் தயாரிப்பதற்கான கட்டண ரசீதை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
கட்டண ரசீதுடன் பத்திரம் தாக்கல் செய்யப்படுவதை பதிவு அலுவலர்கள் உறுதி செய்த பின்பே, பத்திர பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பத்திர எழுத்தர்கள் பொதுமக்களுக்கு கொடுக்கும் அந்த கட்டண ரசீதின் நகலை, பதிவு அலுவலர்கள் அந்தந்த பத்திரங்களுடன் சேர்ந்து அலுவலக கோப்பில் வைத்து பராமரிக்க வேண்டும். இன்று முதல் இந்த முறை கட்டாயம் ஆகிறது.
இதேபோல் பத்திர எழுத்தர்களும், நிலத்தரகர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழையக் கூடாது என்ற நெறிமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது..
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications