அன்புமணிக்கு ஆதரவாக மோசடி நடவடிக்கை! தேர்தல் ஆணையத்தை கண்டித்து! டெல்லியில் பாமக ஆர்ப்பாட்டம்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்தும் நீதி கேட்டும் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் பாமக சார்பில் போராட்டம் தொடங்கியது. இதற்கான அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். கடந்த காலத்தில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத நிலையில் வயல் வரப்பில் நடந்து சென்றோம். இராந்தல் விளக்கு பிடித்தும் பல கூட்டங்களில் பேசி 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று கட்சி வளர்த்து சமூக நீதியை உயிர் மூச்சு கொள்கையாகக் கொண்டு மக்கள் மேம்பட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகிறேன்.

தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடும் பெற்றுக்கொடுத்தேன். அதன் பின் வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடும் பெற்றுக்கொடுத்தேன். ஆனால் இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய அளவில் மத்திய கல்வி நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இட ஒதுக்கீடு மத்திய மருத்துவ படிப்பில் பட்டியலின பழங்குடியினர் SC-ST வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்ததை நாடே அறியும்.
நான் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு பேராசிரியர் தீரன் தலைவராக இருந்து செயல்பட்டார். அடுத்து ஜி.கே.மணி 25 ஆண்டு காலம் தலைவராக செயல்பட்டு வந்தார். அடுத்து அன்புமணி தலைவராக விரும்பியதால் சென்னை அடுத்துள்ள திருவேற்காடு GPN பேலஸில் 28.5.2022 அன்று பொதுக்குழுவை கூட்டி தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தேன்.
ஆனால் அன்புமணி சதி திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது.
இது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை. தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு உடந்தையாக உள்ளது. அன்புமணி கட்சியை என்னிடமிருந்து சூழ்ச்சியால் பறித்துக் கொண்டது கட்சி திருட்டு செயல். தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு திருடி கொடுத்துள்ளது.
இப்படி எனது கட்சியை பறித்துக்கொண்டது என் உயிரை பறித்ததாகும். 46 ஆண்டு காலம் உழைத்து போராடிய என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத உயிர் பரிபோன செயல் கண்ணீர் வடிக்கிறேன். கலங்கி நிற்கிறேன். இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனது கட்சி என்கைக்கு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்.
தேர்தல் ஆணையத்தின் மோசடியான கட்சியை திருடி கொடுத்த ஜனநாயக படுகொலையை கண்டித்து நீதிகேட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 02.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதில் இன்னாள், முன்னாள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள். அடுத்து தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதிகேட்டும் புது டெல்லியில் 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டிலிருந்து பா.ம.க.வினர் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய தினம் போராட்டம் தொடங்கியுள்ளது. முன்னதாக கடந்த 2ஆம் தேதி சென்னையில் கூட ஒரு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதை மழை காரணமாக ஒத்தி வைத்துவிட்டனர்.
இதுகுறித்து தைலாபுரம் தோட்டத்தில் இருந்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கனமழையின் காரணமாக கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோலத்தான் போராட்டம் நடத்துவது மிகவும் சிரமம் என்பதால், சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 02.12.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த போராட்டம் கடும் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications