எதிர்பார்க்காத ட்விஸ்ட்! தமிழக அரசின் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கும் பவன் கல்யாண் கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை சென்னையில் பல்வேறு கட்சிகளும் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில், இதில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுக்க இப்போது 543 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. இருப்பினும், மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் சூழலில், அதற்கேற்ப லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையையும் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டிலிமிட்டேஷன் எனப்படும் தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு செய்யவுள்ளது.

Pawan kalyan delimitation

இருப்பினும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தின் எண்ணிக்கை குறையலாம் என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதாவது மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் போது, நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.

சில காலத்திற்கு முன்பு வரை மக்கள்தொகை அதிகரிப்பு பிரச்சினை எனச் சொல்லி அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி சொல்லி மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தியது. அதைச் சிறப்பாகக் கையாண்டு மக்கள்தொகையைக் குறைத்த மாநிலங்களுக்கு இது தண்டனை போல ஆகிவிடும் என்பதே திமுகவின் வாதமாக இருந்தது.

இது தொடர்பாகத் தென் மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாளை வரும் மார்ச் 22ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு கட்சிகளுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் பாஜக- தெலுங்கு தேசம் கூட்டணியில் பவன் கல்யாண் இருக்கிறார். மேலும் மும்மொழி கொள்கை விவகாரத்தில் கூட அவர் திமுகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தே பேசி வருகிறார். இதற்கிடையே பெரிய ட்விஸ்ட்டாக தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்கிறது. இதற்காக ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் இன்றிரவு சென்னை வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+