சென்னை டூ தாய்லாந்து.. ஏர்போர்ட் வந்த இளைஞர்கள்.. செல்போன் மெசேஜை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள்
சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லக்கூடிய விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களை சோதனை செய்து விசாரித்த போது செல்போன் எஸ்எம்எஸ் காரணமாக பெரிய உண்மை தெரிய வந்துள்ளது. பெருங்களத்தூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி குறித்த விவரம் இருந்துள்ளது.
சென்னை விமான நிலையம் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் விமான நிலையம் ஆகும். எப்போதுமே விமானம் வந்த வண்ணம் இருக்கும், விமானம் எங்காவது சென்ற வண்ணம் இருக்கும். சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் விமானங்கள் அதிக அளவில் செல்கின்றன. நாள் தோறும் பல ஆயிரம் பேர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். விமான நிலையம் வரும் பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.

தாய்லாந்து விமானம்
அந்த வகையில் சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லக்கூடிய விமானத்தில் பயணம் செய்தற்காக வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களை சோதனை செய்து விசாரித்தபோது அவர்கள் பேச்சு, செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
குடியுரிமை அதிகாரிகள்
இதனால் சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் அதில் ஒரு நபரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, இளம்பெண்ணின் புகைப்படத்தை ஒருவருக்கு அனுப்பி இந்த பெண்ணை தீர்த்துக்கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து எந்த நபருக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது என விசாரித்த போது அவருடன் பயணம் செய்ய வந்த மற்றொரு நபருக்கு அந்த குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது.
பெருங்களத்தூர் மாணவி
மேலும் விசாரித்ததில் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது, இதையடுத்து இருவரின் பயணத்தை ரத்து செய்து பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்திற்கு குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலையம் வந்த பீர்க்கன்கரணை போலீசார் 2 பேரையும் பீர்க்கன்கரணை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தன்ராஜ் (வயது 21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான விக்னேஷ் (25) என்பது தெரிய வந்தது.
ஒரு தலைக்காதல்
மேலும் தன்ராஜ் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை 2 வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததும், அதை அந்தப் பெண் ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தன்ராஜ் பெண்ணை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 இளைஞர்களையும் பீர்க்கன்கரணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications