திடீரென.. வங்கி கணக்கில் வருது அரசின் பணம்.. பல கோடி ஊழியர்களுக்கு "ஆனந்த கண்ணீர்".. செம முடிவு
சென்னை: நாடு முழுக்க இருக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முக்கியமான நல்ல செய்தி ஒன்று சென்றுள்ளது. வருங்கால வைப்பு நிதி தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான (FY24) சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்ததில் முக்கியமான சில தகவல்கள் வெளியாகின.

கடந்த பிப்ரவரியில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியது. வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் அந்த வட்டி டெபாசிட் செய்யப்படும்.இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்ததில் , இந்த செயல்முறையானது பைப்லைனில் உள்ளது, விரைவில் அங்கு காண்பிக்கப்படும். வட்டி வரவு வைக்கப்படும் போதெல்லாம், அது முழுமையாக செலுத்தப்படும். வட்டி இழப்பு ஏற்படாது.
கண்டிப்பாக பணம் அளிக்கப்படும். இருப்பினும், FY23க்கான வட்டி மார்ச் 2024 நிலவரப்படி 281.7 மில்லியன் EPFO உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. EPF திட்டம் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். EPF விதிமுறைகளின்படி, ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை இந்த நிதிக்கு வழங்க வேண்டும்.
EPF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் EPFO இன் மத்திய அறங்காவலர் குழுவால் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. EPFO அதிகாரப்பூர்வ இணையதளம், மிஸ்ட் கால் அழைப்புகள், SMS அல்லது உமாங் ஆப் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் தங்கள் EPF இருப்பைச் சரிபார்க்கலாம். தங்கள் பாஸ்புக்கை சோதனை செய்வதன் மூலம், உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகள், சம்பாதித்த வட்டி மற்றும் ஒட்டுமொத்த EPF இருப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும்.
பெரும்பாலும் ஜூலை மாதத்திற்குள் உங்கள் பிஎப் கணக்கில் அதற்கான வட்டி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் ஊழியர்களுக்கு விரைவில் இந்த மகிழ்ச்சியான செய்தி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எப்., அட்வான்ஸ்: இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு பி.எப்., அட்வான்ஸ் வேண்டும் என்றால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும். விண்ணப்பித்தவர்களுக்கு பி.எப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி.எப்., தொகையிலிருந்து அட்வான்ஸ் பெற முடியும. இதற்கான முறை தானியங்கி நடைமுறையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் பி.எப்., பணம் கிடைக்கும்
நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இன்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும். ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications