வெறும் 22 வயசுதான்.. ஆனால் பிரியங்கா செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்!
ரயில்களில் பணம், நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: பிரியங்காவுக்கு வயசு வெறும் 22தான்.. ஆனால் செய்ற காரியம் ஒவ்வொன்னும் போலீசாரை அதிர வைத்துள்ளது.
பஸ்ஸில் பிக்பாக்கெட் நடக்கும்.. ஆனால் ரயில் பிக்பாக்கெட்டில் கைதேர்ந்தவர்தான் இந்த பிரியங்கா. கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் எலக்ட்ரிக் ரயில்களில் பெண்கள் பெட்டியில் வழக்கமாக ஏறி கொள்வார் பிரியங்கா.

அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அல்லது நெருக்கமாக நின்று கொண்டு, நகை பணம், பர்ஸ்களை கொஞ்ச நேரத்தில் அடித்து விடுவார்.
பயணிகள் பர்ஸை காணோம், செல்போனை காணோம் என்று தொடர்ந்து போலீசில் புகார் சொன்னார்கள். இது சம்பந்தமாக போலீசாரும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அதே எலக்டரிக் ரயிலில் பிரியங்கா இன்னொரு பெண் பயணியிடம் வேலையை காட்டி உள்ளார். இதை அங்கிருந்த சகபயணிகள் பார்த்துவிட்டனர். அதற்கு பிறகுதான், தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் கையும் களவுமாக கொண்டு போய் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில்,பிராட்வே பகுதியை சேர்ந்தவராம் பிரியங்கா.. 22 வயதாகிறது என்கிறார். இவருக்கு திருடுவதுதான் பொழப்பாம்.. அவரிடம் சோதனை செய்தபோது, பயணிகளிடம் இருந்து அப்போது ஆட்டைய போட்டிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு சவரன் வளையல், நான்கு செல் போன்கள் இருந்தன.. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பிரியங்காவையும் கைது செய்துள்ளனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications