விவசாயிகளுக்கு செம குஷி..பிஎம் கிசான் யோஜனா திட்டம்.. ஆன்லைனில் இப்படி சான்ஸ் இருக்கா? வரப்பிரசாதம்
சென்னை: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக, பிஎம் கிசான் தொகையை மத்திய அரசு, 50 சதவீதம் அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.. இந்நிலையில், இந்த திட்டத்தில் எவ்வாறு இணைவது? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதான் மந்திரி கிசான்: இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் எத்தனையோ விவசாயிகள் நாடு முழுவதும் பயன்பெற்று வருகின்றனர். அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் இந்த பலன்களை பெறலாம். ஆனால், இந்த பலனை பெற விரும்பினால், விவசாயிகளின் பிஎம் கிசான் கணக்குகளுடன் ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும்.
ஆதார் முக்கியம்: ஆதாரை இணைத்தால்தான் தவணைத்தொகை கிடைக்கும்.. எனவே, இந்த திட்டத்தின் மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெறுவதற்கான நில ஆவணங்கள், ஆதார் எண் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் துறை அழைப்பு விடுத்தவாறே உள்ளது.
எப்படி சேருவது: இந்த திட்டத்தில் இணைய, நிலத்தின் உரிமையாளராக நீங்கள் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான தகுதியாகும்.. ஒருவேளை, மற்றவர்களின் நிலத்தில் விவசாயம் செய்தாலும், அந்த நிலம் அவரது பெயருக்கு பதிலாக, அவரது தந்தையின் பெயரிலோ, அல்லது அவரது தாத்தாவின் பெயரிலோ இருந்தால், இந்த திட்டத்துக்கு அவர் விண்ணப்பிக்க முடியாது.
ஆன்லைன் விண்ணப்பம்: விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர வேண்டுமானால், அதற்காக அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.. செல்போனிலேயே, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.
- முதலில், https://pmkisan.gov.in/. என்ற அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
- "உழவர் மூலைக்கு" (Farmers Corner) சென்று "புதிய உழவர் பதிவு" (New Farmer Registration) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ஒரு புதிய ஸ்கிரீன் தென்படும். இதில், ஆதார் எண் (Aadhaar No) , படக்குறியீட்டை (Image Code) பதிவிட்டு, "தொடர இங்கே கிளிக் செய்க" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ஸ்கிரீனில் தெரியும், பதிவு படிவம் (Registration Form) என்ற ஆப்ஷனில், உங்கள் மாநிலம் (State), மாவட்டம், கிராமம், தொகுதி, துணை மாவட்டம், பாலினம், பெயர், வகை, ஐடி, ஐஎஃப்எஸ்சி குறியீடு, கணக்கு எண், வங்கி பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, தாய் / தந்தை / கணவரின் பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல் கேட்கப்படும்.
- விவசாய நிலத்தின் தகவல்களையும் வழங்க, கணக்கெடுப்பு அல்லது கணக்கு எண், தட்டம்மை எண், பரப்பளவு போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
- இறுதியில், "சேமி" (Save) என்பதை கிளிக் செய்தால், உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications