Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் மகிழ்ச்சி.. பி.எம். கிசான் விடுங்க.. சட்டென சர்ப்ரைஸ் தந்த அரசு.. 100% கரண்ட் பில் இலவசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளின் நன்மைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க துவங்கப்பட்ட திட்டமாகும்.

PM Kisan Yojana Scheme by Central Government and Surprise Announcement for Uttar Pradesh Farmers 100 current free

விவசாயிகள்: பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்று சொல்லப்படும் இந்த திட்டம், கமத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவிகளை வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.

இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 16வது தவணையை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அந்தவகையில், விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
தவணை உயர்கிறதா: அதேபோல, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டுத்தொகை, ரூ.12000 ஆக உயர்த்தப்பட்டு, தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படலாம் என்றும், வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.

அதேபோல, விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. "பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனை துவங்கப்பட்டு, கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் கிடைக்கிறது. அதேபோல, 'பாரத் ரைஸ் ' என்று சொல்லக்கூடிய பாரத் அரிசியை கொண்டுவந்துள்ளது. கிலோ ரூ.29 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தானியங்கள்: அந்தவகையில், விவசாயிகளுக்கான உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்கான செலவு, 1.02 லட்சம் கோடியில் இருந்து 2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், விவசாயிகளின் வளர்ச்சி தற்போது மேம்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசம் அளிக்கும் வகையிலான முக்கிய திட்டத்துக்கு உத்தரபிரதேச மாநில அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதாவது, உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

தள்ளுபடி: அந்தவகையில், விவசாயிகளுக்கு மின்கட்டணத்திலிருந்து 100% தள்ளுபடி அளிக்கும் திட்டத்திற்கு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.. இந்த திட்டத்தினால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குழாய் கிணறுகளை பயன்படுத்தி, விவசாயிகள் ஒரு ரூபாய் கூட இனிமேல் கரண்ட் பில் கட்டவேண்டிய தேவையே இல்லையாம்.

2023 ஏப்ரல் 1 தேதி முதல், கரண்ட் பில் எதுவும் செலுத்தாமல் இருந்தாலும், முந்தைய பில்களுக்கு வட்டி இல்லாமல் பணம் மட்டும் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், கிட்டத்தட்ட 1.5 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகள்: கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை சேர்த்து 2 வகையிலும் மொத்தம் 14,78,000 குழாய் கிணறுகளின் மின் கட்டணம் நூறு சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது உத்தரபிரதேச மாநில விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் நாடு முழுவதும் வெளியாகி வருகிறது. முக்கியமாக விவசாயிகளின் நலனை கருதி, பல்வேறு மாநிலங்களில், இப்படியான புதுபுது அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள்.

உத்தரபிரதேசம்: சமீபத்தில் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.. உத்தரப்பிரதேசம் உட்பட பிற வடமாநிலங்களில் தங்கள் செல்வாக்கு குறைந்த மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலில் வெளியிட பாஜக திட்டமிட்டிருந்ததாம்..

அதன்படியே அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 51 என மொத்தமாக 195 வேட்பாளர்களை முதல்கட்டமாக அறிவித்திருந்தது.. மொத்தத்தில், தென்மாநிலங்களைவிட, வடமாநிலங்களில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதுடன், அதற்கேற்றவாறு பல்வேறு மக்கள்நலன் சார்ந்த அறிவிப்புகளையும் பாஜக அரசு வெளியிடலாம் என்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+