டெல்லியில் நாளை ஜி 20 கூட்டம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
சென்னை: ஜி 20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேறகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், ஐரேப்பியன் யூனியன் ஆகிய 20 நாடுகள் சேர்ந்ததுதான் ஜி 20 எனும் அமைப்பாகும்.
இதன் நோக்கமே உலக பொருளாதாரத்தில் முதன்மைச் சிக்கல்களை கலந்து பேசி வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகும். ஆண்டுதோறும் இந்த 20 நாடுகளில் ஒவ்வொரு நாடும் தலைமை பண்பை ஏற்கும். அந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அந்த நாட்டில் நடைபெறும்.

ஜி 20 உச்சி மாநாடு
அந்த வகையில் கடந்த ஆண்டு 2021 இல் ஜி20 உச்சி மாநாடுக்கான தலைமை பொறுப்பை இந்தோனேஷியா ஏற்றது. ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஜி20 தலைமை பொறுப்பானது கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொறுப்பில் இந்தியா ஓராண்டுக்கு தொடரும். இதையடுத்து அடுத்த ஆண்டு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

50 நகரங்கள்
இது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஜி 20 தொடர்பாக 200 கூட்டங்களளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பீகாரில் பாட்னாவில் அடுத்த ஆண்டு மார்ச் 6, 7 தேதிகளில் ஜி 20 கூட்டம் நடைபெறுகிறது.

ஜி 20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்த
ஜி 20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக டெல்லியில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்பேன் என முதல் நபராக அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை டெல்லி செல்கிறார். அங்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நாளை இரவே அவர் சென்னை திரும்புகிறார். இந்த டெல்லி ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி அனைத்து கட்சித் தலைவர்களையும் வரவேற்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி தரப்பினர் குஷியாக உள்ளனர். எனினும் எந்த தலைவருடனும் பிரதமர் மோடி தனியே சந்தித்து பேச அனுமதியில்லை என்றும் தெரிகிறது.
-
கருப்பு தங்கம் ஜாக்பாட்! புதினின் சீக்ரெட் ஆஃபர்.. உங்க கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
ஒரே நேரத்தில் ஓமன் மற்றும் மலேசியாவுடன் பேசிய மோடி.. மாஸ்டர் மூவ்! இனி பிரச்சனை இருக்காது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications