கோட்டையில் கால் வைக்கும் பாஜக.. தமிழ்நாட்டிலேயே 4 நாட்கள் "கேம்ப்" அடிக்கும் மோடி.. பிரம்மாஸ்திரம்!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக சார்பாக தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி 4 நாட்களுக்கு தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு விசிட் அடித்துக்கொண்டே இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி ஏப்., 9ம் தேதி தமிழகம் வருகை புரிகிறார். திமுக, அதிமுகவின் கோட்டயான தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க மோடி தீவிரமாக முயன்று வருகிறார்.

முதல் கட்டமாக தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். இவர்களின் அறிமுக கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். பல கூட்டங்களில் அவர் இங்கே பேச உள்ளார். முக்கியமாக சென்னை பாண்டி பஜார் பகுதியில் வாகன பேரணியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ஏற்கனவே தேர்தல் அறிவிப்பிற்கு முன் 5 முறை அவர் தமிழ்நாடு வந்தார். கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே மோடி கூட்டங்களில் கலந்து கொண்டார் .
உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வரும் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடுத்தடுத்து விசிட் அடித்து வரும் நிலையில் 4 நாட்கள் கேம்ப் அடித்து பிரதமர் மோடி தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
4 நாட்கள் நிலவரம்; ஏப்ரல் 9ல் வேலூரில் வாகன பேரணி மேற்கொள்கிறார். புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் செய்கிறார்.
ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் வாகன பேரணி மேற்கொள்கிறார். தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
ஏப்ரல் 10 நீலகிரியில் வாகன பேரணி மேற்கொள்கிறார். நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
ஏப்ரல் 10 கோவையில் பொதுக்கூட்டம் மேற்கொள்கிறார். கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
ஏப்ரல் 13 பெரம்பலூரில் பொதுக் கூட்டம் செல்கிறார். இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
ஏப்ரல் 14 விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
பாஜக காட்டும் வேகம்: தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தீவிரமாக வேகம் காட்டி வருகிறது. தமிழ் ஊடகங்களுக்கு பேட்டி தருவது, கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுப்பது என்று பாஜக அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுகவின் கோட்டயான தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க மோடி தீவிரமாக முயன்று வருகிறார்.
ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடுத்தடுத்து விசிட் அடித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்கள் இன்னும் தமிழ்நாட்டிற்கு வராதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மெதுவாகத்தான் செயல்பட்டு வருகிறது. உதாரணமாக அமுக எல்லாம் வேட்பாளர்களை அறிவித்த பின்தான் கோஷ்டி மோதல் நிறைந்த காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதுவரை தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ பிரச்சாரம் செய்யவே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications