தேவர் குரு பூஜை.. யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க.. பிரதமர் மோடி வரவில்லைங்க.. அண்ணாமலை விளக்கம்
சென்னை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பசும்பொன்னிற்கு வரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க வரும் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பசும்பொன் வருகிறார் என தவறான தகவல் பரவி வருகிறது. அது போல் அவர் பசும்பொன்னிற்கு வரவில்லை.
எங்கிருந்து இப்படி ஒரு தகவல் பரவியதோ தெரியவில்லை. பிரதமர் வருவதாக இருந்தால் 2 மாதங்கள் முன்பே அது தீர்மானிக்கப்படும். திடீரென தீர்மானிக்க முடியாது.

தேவர் குரு பூஜை
அடுத்த வருடம் தேவர் குரு பூஜைக்கு பிரதமருக்கு அழைப்புவிடுப்போம். மேலும், அனைத்து குரு பூஜைகளும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பது பாஜக விருப்பம். இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் இந்தியை திணித்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக இந்தி திணிப்பை வேடிக்கை பார்த்தது.

3 மொழிகள்
3 மொழிகளை கற்க வேண்டும் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கை. இந்தியை தமிழகத்தில் மத்திய அரசு திணித்தால் தமிழக பாஜக எதிர்க்கும். திமுகவின் கபடநாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பாக நடைபெற்றது.

112 பரிந்துரைகள்
இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதுகுறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

உண்மை என்ன
அது போல் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி பசும்பொன் வருகிறார் என்ற தகவல் வெளியானது. பிரதமராக 8 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மோடிக்கு இப்போதுதான் தேவர் ஜெயந்தி விழா தெரிகிறதா, எல்லாம் முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து இந்த நாடகம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை தேவர் ஜெயந்தியில் வைத்து பிரதமர் மோடி அறிவிப்பதாகவும் ஒரு தவறான தகவல் கசிந்தது நினைவுக்கூரத்தக்கது.
-
அண்ணாமலை பேட்டி.. டிசம்பர் 2025-லேயே விலக முடிவு செஞ்சேங்க.. அப்போ அமித் ஷா சொன்னது என்ன தெரியுமா? -
இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு -
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக












Click it and Unblock the Notifications