அந்த இடத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன்! அடம் பிடித்த அன்புமணி.. அதிமுகவிடம் கேட்ட அந்த கேள்வி
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாமக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறதாம். இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முக்கியமான இடம் ஒன்றை அதிமுகவிடம் கேட்டு உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.
லோக்சபா தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

முறிந்த அதிமுக கூட்டணி: அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டதுதான் பாமக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள்.
பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.
பாமக முற்றுப்புள்ளி: அதன்பின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட.. நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இல்லை. அதிமுகவுடன் இணையும் எண்ணத்தில் பாமக இல்லை. உடைந்த அதிமுகவில் இணைந்தால் பயன் இல்லை என்று நினைக்கிறார். எடப்பாடியும் இன்னும் தான்தான் ஒட்டுமொத்த அதிமுக என்பதை நிரூபிக்கவில்லை. தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் நின்றால் வெற்றிபெறுவேன் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை.
யாருடன் கூட்டணி: இந்த நிலையில்தான், 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு பக்கம் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்றும் ஒரு பக்கம் பேச்சு நடந்து வந்தது. ஆனால் இரண்டும் அதிமுக பக்கம் செல்லும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றான். இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அதன்படி அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பாமக நினைக்கிறதாம். லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு சேலம் தொகுதியை கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.
மொத்தமாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக அதிமுகவிடம் அன்புமணி கோரிக்கை வைத்து உள்ளாராம்..
அதிமுக ரியாக்சன்: ராஜ்ய சபா பதவிக்கு அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ராஜ்ய சபா மட்டுமல்ல.. சேலம் தொகுதியில் எடப்பாடி ஆள்தான் நிற்பார். அங்கே கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனவே வேறு தொகுதி கேளுங்கள் என்று அதிமுக கறார் காட்டுகிறதாம்.
ராமதாஸ்: இன்னொரு பக்கம் ராமதாஸ் அதிமுக கூட்டணியை இறுதி செய்ய தீவிரமாக முயற்சிகளை எடுக்கிறாராம். பாமக அதிமுக கூட்டணியே சரியாக இருக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இதுதான் சரியாக இருக்கும் என்பதால்.. 2024லும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்.
அதே கூட்டணி தொடர வேண்டும் என்று ராமதாஸ் நினைக்கிறாராம். மேலும் பாமகவை உடைக்க பாஜக பார்க்கிறது. அதனால் பாஜகவோடு சேருவது சரியாக இருக்காது என்று ராமதாஸ் நினைக்கிறாராம்.












Click it and Unblock the Notifications