தமிழக அரசை 3-வது முறையாக பாராட்டி தள்ளிய டாக்டர் ராமதாஸ்.. எதுக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தியதற்காக தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் இருக்கிறது. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து விட்டாலும் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து மற்ற மாவட்டங்களுக்கு நம்பிக்கையை ஊட்டி வருகிறது.

அரசு ஜெட் வேகம்

அரசு ஜெட் வேகம்

மற்ற மாவட்டங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. ஆக்சிஜன், மருந்துகள் உடனுக்குடன் விநியோகம் செய்யப்படுகின்றன. தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டலத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

 ராமதாஸ் பாராட்டு

ராமதாஸ் பாராட்டு

இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தியதற்காக தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தொடங்கி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒதிஷா, மேற்குவங்கம் ஆகிய கடலோர மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடும்படியாக இல்லை.

சென்னையில் குறைவு

சென்னையில் குறைவு

பெங்களூருடன் ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஊரடங்கும் ஒரு காரணம். இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து விழிப்பாக பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசை டாக்டர் ராமதாஸ் பாராட்டுவது இது 3-வது முறையாகும்.

3-வது முறையாக பாராட்டு

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் 5 முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார். அதனை ராமதாஸ் வரவேற்றார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் நேற்று ஸ்டாலின் அறிவித்ததற்கும் ராமதாஸ் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+