ராமதாஸ் எடுத்த புது அஸ்திரம்.. அரசுக்கு வைத்த கோரிக்கை.. ஏற்பாரா எடப்பாடியார்.. செம்ம திருப்பம்!
சென்னை: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட காலமாகவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுமே நடைமுறைப்படுத்தவில்லை..
கடந்த சட்டசபை தேர்தலில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியுடன் தேர்தலை எதிர்கொண்டது திமுக. ஆனால் அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது.

திமுக தோல்வி
இதில் அதிமுகவின் கோரிக்கைக்குத்தான் ஆதரவு அதிகமாக கிடைத்தது. ஆம் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதாக சொன்ன அதிமுக ஆட்சியை பிடித்தது.,ஆனால் ஒரேடியாக மதுவிலக்கை கொண்டுவருவதாக சொன்ன திமுக தோல்வியை தழுவியது. திமுகவின் தோல்விக்கு மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் பிரித்தது ஒரு பக்கம் என்றால், மதுப்பிரியர்களின் வாக்குகள் முக்கியமான காரணமாக இருக்கலாம் என்றும் அப்போது பேசப்பட்டது.

500 கடைகள் மூடல்
இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, பதவி ஏற்ற உடனே 500 டாஸ்மாக்குகளை மூட உத்தரவிட்டார். படிப்படியாக ஐந்து வருடத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாகவும் உறுதி அளித்தார். டாஸ்மாக் வருமானத்தை வேளாண் உற்பத்தி, கனிம வளங்கள் உள்பட வேறு வகையில் எடுக்கவும் வழிவகைகளை உருவாக்கப்போவதாக கூறியிருந்தார். மதுக்கடைகளின் நேரத்தையும் குறைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா உடல் நலக்குறைவால் 2016ம் ஆண்டே மரணம் அடைந்தார்.

பாமக கோரிக்கை
அதன்பிறகு அவரது வழியில் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இன்னும் இரண்டு மாதத்தில் ஐந்து வருட அதிமுக ஆட்சி நிறைவு பெறுகிறது. இப்படியான சூழலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக மதுவிலக்கை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

மதுவிலக்கு நடைமுறை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இவரது கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை எடுப்பாரா அல்லது தேர்தல் வாக்குறுதியாக புதிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications