சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி பிரச்சனை..பழைய கணக்கை வச்சு ஓட்டிக்கிட்டுருக்கோம்.. கொதித்த அன்புமணி
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதிப் பிரச்சனை. இதன் மூலம் இடஒதுக்கீடு வரும் சாதியை வைத்துதான் நூறாண்டுகளாக அடக்குமுறை நடந்தது. அதை சரிசெய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பது பொய். இப்போது எல்லாமே விரல் நுனியில் இருக்கிறது. ஒரு பழைய கணக்கை வைத்துக் கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது டிவி கூட கிடையாது. பிளாக் அண்ட் ஒயிட் டிவி கூட கணக்கெடுப்பின்போது கிடையாது. அம்பாசிடர் கார் கூட அப்போது வரவில்லை. அந்தக் கணக்கெடுப்பை வைத்துக் கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளுக்கு படிப்பு, வேலை, கடன், சுயவேலை கொடுப்பதற்காக பழைய கணக்கெடுப்பை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
புதிய கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். இந்த சமூகங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சமூகங்களும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் தான் நீங்கள் சமூகநீதியை நிலைநாட்ட முடியும். இல்லையெனில் எதை வைத்து நீங்கள் சமூகநிதியை நிலைநாட்டுவீர்கள்.
இதில் பல காரணங்கள் இருக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எடுப்பார்கள். எங்களது அழுத்தம் காரணமாக பிரதமர் மோடியிடம் பல முறை அழுத்தம் கொடுத்த நிலையில், 2027 இல் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
1931க்குப் பிறகு முதல்முறையாக இந்திய அளவிலே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்ற அரசு இப்போது இருக்கும் அரசு. இதற்காக 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் மாற்றம் கிடையாது. சாதிவாரி கணக்கெடுக்கெடுப்பு ஒரு சமூகநீதிப் பிரச்சனை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும் என்றுதான் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறோம் என்று கூறினார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications