எல்லாரும் உடனே வெளியே போங்க.. அதிக டெசிபல்லில் கத்திய ராமதாஸ்.. அந்த ரூமில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் அப்பா-மகனுக்குமிடையே நடக்கும் மோதல், பாமகவை மட்டுமல்ல தமிழக அரசியல் கட்சிகளிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது மகனை ஒரு அப்பா சொல்ல விரும்பாத குற்றச்சாட்டுகளை எல்லாம் கூறி ராமதாஸ் நடத்திய தாக்குதல் தற்போது அவரது குடும்பத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் . மகனோடு நிற்காமல் தனது மருமகள் குறித்தும்.. அவர் தனது காலில் விழுந்தார் என்பது குறித்தும் கடுமையாக ராமதாஸ் பேசி இருப்பது கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை சந்தித்துள்ளது. மருமகள் பற்றிய ராமதாஸ் பேச்சு நாகரீகமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடுமையான பேச்சுக்கள்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் மருமகள் சௌமியா ராமதாஸ் பற்றி பேசுகையில், நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சு நாட்டு மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்பும் செயலாகும். உண்மையில் தவறு செய்தது அன்புமணி அல்ல, நான் தான். எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்தேன். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆட தொடங்கியது அன்புமணி தான். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழுவில் மேடை நாகரிகம் எதுவுமே இல்லாமல் நடந்து கொண்டது யார்?"

அன்புமணி கூசாமல் பொய் சொல்வார்.உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அவர் கூறியது பொய். தகப்பனிடம் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல. எனக்கு விருப்பம் இல்லாமலேயே எல்லோரும் சேர்ந்து அன்புமணிக்கு Health Minister பதவியை வாங்கிக் கொடுத்தார்கள். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் 3 இடங்களாவது வென்றிருப்போம், அதிமுக 6 இடங்களுக்கு மேல் வென்றிருப்பார்கள். எங்களுக்கு சின்னமும் கிடைத்திருக்கும். அதிமுக - பாமக கூட்டணியே என்பது இயற்கையான கூட்டணி.

கட்சி பிரச்சனைகள் பற்றி பேசியபோது அவரது அம்மாவின் மீதே பாட்டிலை வீசி எறிந்தார். நல்லவேளை பாட்டில் அவர்மீது படவில்லை. புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு மேடையில் அநாகரிகமாக நடந்துகொண்டது யார்? முகுந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்தபோது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியான செயலா? பனையூரில் அலுவலகம் திறந்திருக்குறேன், அங்கே வந்து என்னை சந்தியுங்கள் எனச் சொன்னது சரியா? சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டுவந்தது யார்? அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை.

வளர்த்த கிடாவே என் மார்பில் எட்டி உதைத்துவிட்டது.அழகான ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார் என்று அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

PMK Ramadoss angry decision against supporters of Anbumani Ramadoss in his own family

இந்தளவிற்கு போகணுமா?

மகள், மருமகன், பேரன்கள் என பலரும் ராமதாசிடம், "இந்தளவுக்கு போகனுமா? வீட்டுக்குள்ளே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனையை பொது வெளிக்கு கொண்டு வரலாமா? கட்சியை எத்தனை நாளைக்கு உங்களால் கொண்டுப் போக முடியும்னு யோசித்தீர்களா? ரொம்பவும் அவசரப்பட்டு விட்டீர்கள்" என்று தயங்கித் தயங்கி சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு அதிக டெசிபல்ஸில் கத்தியிருக்கிறார் ராமதாஸ். எல்லோரும் எனக்கு புத்தி சொல்றீங்களா ? எத்தனை நாளா இந்த யோசனை உங்களுக்கு ? அவன் தான் எனக்கு எதிரா இருக்கான். இப்போ நீங்களுமா? எல்லோரும் வெளியே போங்க என்று கத்தித்தீர்த்துள்ளார் ராமதாஸ். தலை குனிந்தபடி, ராமதாசின் அறையிலிருந்து எல்லோரும் வெளியேறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், ராமதாஸின் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ரியாக்சன் காட்ட வேண்டும். இல்லைன்னா அடுத்தடுத்து ஏதேனும் அறிவிப்பு செஞ்சிக்கிட்டே இருப்பார் என்று அன்புமணியிடம் பாமகவின் மா.செ.க்கள் பலரும் வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்தார் அன்புமணி.

ஆனால், பாமகவின் மா.செ.க்களை நீக்கியும், புதிய மா.செ.க்களை நியமித்தும் ராமதாஸ் அதிரடி காட்ட , "இனியும் பொறுக்க முடியாது" என்கிற ரீதியில் மா.செ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலரும் அன்புமணியை சந்தித்தனர். அவர்களிடம் தீவிரமாக ஆலோசித்த அன்புமணி, அப்போது நிர்வாகிகள் வலியுறுத்தியதை அடுத்து, ராமதாசின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார். அத்துடன், கட்சியினரை நீக்கவும், நியமிக்கவும் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இப்போதும் நான் தான் தலைவர். எனது உத்தரவே செல்லும் என்று ராமதாசுக்கு பதிலடித் தந்துள்ளார் அன்புமணி.

பாமகவின் சட்டவிதிகளின் படியே அன்புமணி செயல்படத் தொடங்கியிருக்கிறார் என்கின்றனர் பாமக நிர்வாகிகள். இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டவும், கட்சியின் நிறுவனர் பதவியை நீக்க கூட்டத்தில் முடிவெடுக்கவும் அன்புமணி தீர்மானித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாநில நிர்வாகிகளும், மா.செ.க்களும், "பொதுக் குழுவை கூட்டி கட்சி உங்கள் பின்னால் இருப்பதை உறுதி செய்வோம். அதே சமயம், நிறுவனர் பதவியை நீக்க வேண்டாம். மாறாக, அப்பதவியைக் கெளரவப் பதவியாக மாற்றியமைக்கலாம்" என்று அன்புமணிக்கு யோசனை தெரிவித்தபடி இருக்கின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+